பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

துற்றது. அவர் அதனேக் கொணர்ந்து அன்புடன் கணவனுக்குப் படைத்தனர். அதனையும் உண்ட பரமதத்தன், இது முன் தந்த மாங்கனி போல்வ தன்று. இதன் சுவை முன்னேயதினும் விஞ்சி நிற் கிறது. இஃது ஏது? உண்மையினை ஒளியாமல் உரைக்க, என்று உறுமினன்.

அம்மையார் இன்னது செய்வதென்றுணராராய், இடர்க்கடலில் இடர்ப்படுவாராளுர்; அருளுடை யார் அளித்தருளும் செவ்விய பேர் அருள்” என்று விளம்பவும் அஞ்சினர்; மறைத் துச் சொல்லவும் மயங்கினர். இவ்வாறு இருபாற்கவர்வுற்று இடை யூசல் ஆடி ஒருபாற்படாமல் இருந்து, முடிவில் கற்பு நெறி கடவாத காரிகையாt ஆதலின், செய்த படி சொல்லுவதே கடன், என்று நடந்தவற்றை நவின்ருர். இதனைக் கேட்ட வணிகன் தெய்வத் திருவருளில் ஐயம் கொண்டான். மாதே, நீ ஈசன் அருளால் மாங்கனி பெற்றது வாய்மையானல், மற். ருெரு கனியையும் வரவழைப்பாய். இன்றேல், நின்னுரையை யான் ஏலேன், என்றனர்.

பரமதத்தனைப்போலப் புனிதவதியார் ஈசன் அருளில் ஐயம் கொள்ளும் நெஞ்சம் வாய்ந்தவர் அல்லர்; இறைவன் அருளில் என்றும் உறுதி உடை யவர். அவர் உள்ளே சென்ருர்; வேண்டுவார் வேண்டுவதே ஈயும் சிவ பெருமானே உளத்தமைத்து, ' உற்ற இடத்து உதவும் உத்தமரே, மற்ருெரு மாங் கனியை ஈங்களித்து அருளிரேல், என்னுரை பொய் யாகும்,' என்று வேண்டி நின்ருர். அல்லல் தீர்த்து ஆளவல்ல ஆண்டவர் அருளால், மற்றுமொரு