பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

காமர்பூங் கொடியஞர் ’ என்று புனிதவதியாரைப் புகன்றதல்ை, காற்று மோதக் கலங்கும் கொடியே போலக் கணவன்

வ ணங்கக் காரிகையார் கலங்கினர் என்பது சிந்தித் தற்குரிய உட்பொருளாகும்.

பரமதத்தனது செயலைக் கண்ட உறவினர் வெள்கினர் ஒருபால்; வியப்புற்றனர் மற்ருெருபால்! * பரமதத்த, நீ மருள் ஏறப்பெற்ருயோ ? உன் திரு மனைவியை வணங்குவதென் ?’ என்று கேட்டனர்

' உறவின் முறை உத்தமர்களே, யான் மருள் உற்றேன் அல்லேன் ; தெளிவே உற்றுளேன். இம் மாதரசியார் மான்ரிடர் அல்லர். நற்பெருந்தெய்வம் என்பதை நான் அறிந்தேன். பெற்ற இம்மகவுக்கு யான் இவ்வம்மையார் பேரே இட்டுள்ளேன். ஆத லாலே, பொற்பதம் பணிந்தேன். நீவிரும் போற்று தல் க. மையாகும்,” என்று கழறிஞன். இவ்வாறு பரமதத்தன் கூறக் கேட்ட உறவினர்கள் உணர்த்து வதும் உணருவதும் இன்ன என அறியாராய் வாளா இருந்தனர்.

இவற்றை எல்லாம் ஆழ்ந்து நோக்குங்கால் பரமதத்தனும் புனிதவதியாரும் கொண்ட மணம் எத் துணைப் பொருத்தமுடையது என்பதைச் சிந்திக்க வேண்டாவா? அச்சிந்தனையின் முடிவு யாதாக முடியும்? இது .ெ பா. ரு ந் தி ய மணம் அன்று; பொருந்தா மணமே என்பது தானே தெரியவரும். அத8ன முன்கூட்டி அன்ருே தொண்டர் சீர் பரவும் தோமில் புலவராகிய சேக்கிழார்,