பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

  • அம்மனை சேய்மையில் உள்ளதன்று; அண்மை யில் உள்ளதே,” என்றும் கூறினர். இவற்ருல் அவர் துறவறத்தார் அல்லர்; இல்லறத்தார்,” என் பதையும், “ இப்பொழுது சென்ருல் அவரைக் கான லாம்,' என்பதையும், அவர் வீடு தூரத்தில் இல்லை; அருகில்தான் உள்ளது," என்பதையும் உணர்த்தி ஞர்கள். இப்பேச்சின் மூலம் உளநூற்பண்பை எவ் வளவு நுட்பமாக நம் முன்னேர் அறிந்திருந்தன்ர் என்பதை நாம் எண்ணி இறும்பூதும், இறுமாப்பும் எய்த் வேண்டாவோ? இத்துணைக் கருத்தும் நிரம்ப ஈண்டுப் பாக்களைப் பெருக்கிப் பாழ்படுத்தல் அடாது என்று அறிந்து பாதிப் பாட்டிலேயே இப்பண்புகளை யடக்கிப் பேசிய சேக்கிழார் பெருமாளுர் செப்பரும் புலமையை என்னென்று வியப்பது! இன்னணம் பாடும் வன்மை விரல் விட்டு எண்ண வல்ல சில ருக்கே வாய்ப்பதன்றி, ஏனையர்க்கு வாயாததாகும். இத்துணைப் பொருட்பொலிவுக்கும் காரணமாய் இருந்த அடிகள்,

“துன்றியநூல் மார்பரும்இத் தொல்பதியார் மனையின்கண்

சென்றனர்.இப் பொழுததுவும் சேய்த்தன்று கணித்தென்ருர்’ என்பன.

திருநாவுக்கரசர் முகவரி முதலான குறிப்புக் களுடன் அப்பூதியார் இல்லத்தை நோக்கிப் புறப் பட்டனர். அப்பர் பெருமான் சிவவேடப் பொலி வோடு தம் இல்லம் நோக்கி வருதலைக் கண்ட அப்பூதியார், சிவபெருமான் அடியவருள் ஒருவர் என மகிழ்ந்து, வாகீசர் கழல் பணிந்தார். அவர் பணியும் முன் அரசும் எதிர் பணிந்தார். அப்பூதி