பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

யார் அப்பரை நோக்கி, 'கருணை புரி வடிவுடையீர் யான் முடிவில் தவம் செய்தேனே !' இன்றெனில், நீர் வின் இல்லம் வருவீரோ !' என்று பணிமொழி பகர்ந்து, பணிந்து நின் ருர். திருநாவுக்கரசர், * அன்பரே, யாம் திரும்பழனம் இறைஞ்சி வரு கின்ருேம். வழிக்கரையில் நீர் அமைத்த தண்ணிர்ப் பந்தல் முதலான அறம் பலரும் கேட்டு. இங்குப் போந்தோம். அவ்வறங்கள் நும் பெயரால் நடத்தல் இன்றி, வேறு ஒருவர் பெயரால் நடப்பதன் கருத்து என்னே ? யாம் அதனை அ றி ய .ே வ ஈண்டு நண்ணினுேம்,' என்றனர்.

இம்மொழிகளைக் கேட்ட அப்பூதியார் துணுக் குற்றர் கிலேயறிந்த சிந்தையர் ஆயிஞர். வேறு ஒன்றும் படுசொல் கூறத் துணிவு பெருதவராய், " நன்றருளிச் செய்திலிர்,' என்று மட்டும் கூறினர். "வேருெரு பேர் என்றிரே, தமக்கு நேர்ந்த இன்னல் களைத் திருத்தொண்டின் திறத்தாலே வென்றவர் தம் திருப்பேரோ வேருெரு பேர்? செம்மை புரி திருத்தொண்டே இம்மையில் உய்யும் வகைக்கோர் உறுதுணையென்று எம் போல்வாரும் தெளியச் செம்மை புரி திருநாவுக்கரசர் திருப்பெயரையன்ருே யான் வரைந்துள்ளேன் ? அதனை வேருெரு பேர் என்றீரே !. அவர் பெருமையை அறியாதார் உலகில் யார் உளர் ? மங்கலமாம் திருவேடத்துள் நின்று நீர் அறியாது இவ்வண்ணம் அறையலாமோ ? நீர் எங்குளிர் ? நீர் யார் ?’ என்று அன்பும் சிறிது துன்பும் கலந்த மொழிகளில் வினவலானுர்.