பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

ஈண்டு ஒர் ஐயம் எழ இடம் உண்டு. அஃதா வது, அப்பூதியார் களவு, பொய், கோபம் முதலிய குற்றம் காய்ந்தவர் என்று முன் அவர் குண நலம் பேசிப் பின் சிறிது வன்மையாக ஈண்டுச் சில வார்த்தைகளே வழங்கில் அடுக்குமோ என்பது. அடுக்கும். எவ்வாறென்னின், தமக்கோ தம் குடிக்கோ பிறர் இடுக்கண் புரியின் அதன்பொருட்டுச் சினவுவ ரேல், அவர் குணம் முன்னுக்குப்பின் முரண் என்று மொழிந்து, குற்றங்காணல் பொருத்தமுடையதாகும். அவ்வாறன்றி, உலகறிந்த ஒரு பெரும்பெரியார் திருப்பெயரைப் புறக்கணித்து வேறு ஒரு பெயர் என்று கூறியதே அவரைச் சீற்றம் கொள்ளச் செய் தது. அஃதன்றியும், மங்கலமா ம் திருவேடத்துள் நின்று திருநாவுக்கரசர் திருப்பெயரைத் தம் வாயா லும் மொழியாது வேறு ஒரு பேர் என்று செப்பிய தால்தான் சினம் எழுந்தது என்க. இது நிற்க.

அப்பூதியார் உள்ளப் பண்டை ஆளுடைய அரசர் (அப்பர்) அகத்துள் கொண்டார்; தாமே அந்தணர் பாராட்டும் அடியர் என்பதை அறிவித் துக்கொள்ள எண்ணினர். இந்நிலையில் செயற்கரிய செய்கலாத சிறியர் ஆயின், 'ஐயா, நீர் டிாரைப் பெரிதும் மதித்துப் போற்றி வருகின்றீரோ, அந்தப் பேர்வழியே யான். உம் அன்பை மெச்சினேன்!” என்று தற்பெருமையைப் பறை சாற்றியிருப்பர். அங்ங்னம் அன்றித் திருத்தொண்டின் நெறி நின்ற திருநாவுக்கரசர், த ம் ைம அறிவித்துக்கொண்ட நிலை யை உன்னி உணர்தல் வேண்டும்.