பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

திருநாவுக்கரசர் தம்மைச் சிறியர் எ ன் று ம் தெளிந்த அறிவும் உணர்வும் இல்லாதவர். என்றும் கூறிக்கொள்கின்ருர்; இவ்வாறு கூறியே தம்மை அறிமுகப்படுத்திக்கொள்கிருச். இதுவன்ருே சீரிய பண்பு ?

' பணியுமாம் என்றும் பெருமை ’’ என்று வள்ளுவர் மொழிந்த வாய்மொழிக்கு ஓர் எடுத்துக்காட்டாக இவரையன்றி வேறு யாரைக் காட்ட இயலும்? திருநாவுக்கரசரது பணிவின் திறனைப் பாவலர் பெருந்தகையார் சேக்கிழார் பெருமானுர்.

“அருளுபெருஞ் சூலையினல் ஆட்கொள்ள அடைந்துய்ந்த

தெருளும்உணர் வும்இல்லாச் சிறுமையேன் யான் என்ருர்’

என்று பாவாற்பாடிப் போற்றுகின் ருர்.

அப்பூதியார் இந்நிலையில் எந்நிலை அடைந் தி ரு ப் பா என்பதை எழுதவும் வேண்டுமோ? ' கும்பிடச் சென்ற தெய்வம் குறுக்கே வந்தது போல அன்ருே எண்ணி அப்பூதியார் அகங்களித்தார் ! அப்பூதியார் கரகமலம் தலைமீது குவிந்தது; கண் ணருவி பொழிந்தது; உரை குழ்றியது; உடம்பெலாம் உரோமப் புளகம் பொலிந்தது. அவர் தரையின் மிசை வீழ்ந்தார்; அப்பரது சரண கமலம் பூண்டார்; அற்றவர்கள் (எல்லாம் இழந்தவர்கள்) அருநிதியம் பெற்ருற்போல முற்ற உள்ளம் களிகூர்ந்தார்.

அப்பூதியார் மனைவியார் மக்கள், உறவினர் முதலானவர்களுடன் அப்பரை இ ைற ஞ் சி னு ரி. அப்பரை ஆசனத்திருத்திப் பூசைகள் புரிந்தார்;