பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

அப்பரை உள் எழுந்தருளுவித்து அவர் தாளே விளக்கிய துய நீரையும் தங்கள்மேல் தெளித்து உள்ளம் பூரித்தார்! உணவு .ெ கா ண் டு செல் ல வேண்டி நின்றர். அவரும் அதற்கு இசைந்தார்.

அப்பூதியார் அடைந்த இன்பத்தைக் கண்ட ஆருயிர் மனேவியார் எந்நிலையில் இரு ந் த ன ர்? அம்மையாரும் அளவிலா ஆனந்தம் கொண்டார்.

“எய்திய பேறு நம்பால் இருந்தவா றேன்னே என்ருர்.” " இது மைதிகழ் மிடற்றினர் (விடம் பொருந்திய திருநீலகண்டரான சிவபெருமான்) அருளிளுல் வந்தது,” என்று மனத்துட்கொண்டார்; விரை வுடன் சமைக்கக் சமையல் அறை புக்கார்; தூய நற்கறிகளே அறுவகைச் சுவையுடன் ஆக்கி ஆய இன் அமுதும் (சோறு) அமைத்து வைத்தார். இதனுல் கணவனுர்க்கேற்ற காரிகையார் அல்லரோ அப்பூதியார் வாழ்க்கைத் துணைவியார்?

அடியவரை உண்பிக்க வாழையிலே அறுத்துத் தரத் தம் மைந்தராம் மூத்த திருநாவுக்கரசைப் புறக் கடைக்குப் போக்கினர். மைந்தரும் மனமகிழ்ச்சி கொண்டு புறக்கடை சென்று வாழைக்குருத்தைக் கத்திகொண்டு அறுக்கும் போது, அரவு ஒன்று அம்மகளுர் அங்கையில் தீண்டியது. என்ருலும், அதனை யாரும் அறிய வெளியிடாது கொய்த குருத் தைத் தம் தாயர்பால் வைத்துத் தரையில் மயங்கி வீழ்ந்தார்.

பாம்பு தீண்டியதை அறிவிப்பின் வந்த பெரி யார் உணவுகொள்ள இயலாது போகுமே என்னும்