பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

பாம்பு கடிக்க மயங்கிய மைந்தரைப் பாயினுள் மூடிப் புறமனை முன்றிலில் மறைத்து வைத்தனர்; அப்படி வைத்த செயலே அப்பர் அறவே அறியா திருக்கவும் முயன்று, அவர்க்கு அமுது செய்விக்க அவாவி நின்றனர்; கடிது வந்து வாகீசர் கழல் பணிந்து, “காலம் தாழ்க்கின்றது. அ. மு து செய்து, எம்குடி முழுதும் வாழச் செய்வீர்,” என்று வேண்டி நின்ருர். ஈண்டும் அப்பூதியார் வாக்கில் மங்கலச் சொல் பயிலுமாறு சேக்கிழார் அமைத்த திறனை நோக்கலாம்.

அப்பூதியார் அ றி ந் ேத அறியாமலோ “ எம்குடி முழுதும் வாழச் செய்வீர்,” என்று கூறி யுள்ளார். குடி முழுதும் வாழும் நெறி எப்போது கூடும்? மூத்த மகனுர் உயிருடன் இருந்து அவர் வழி குடி தழைத்தால் அன்ருே வாழ இயலும் ? அவரோ, இது போது மயங்கிக் கிடக்கின்ருர். ஆகவே, அப்பூதியடிகளார் அவரை எழுப்பியருள வம் வேண்டினர் என்னும் உள்ளுறை பொருளும் இருத்தலைக் காண்க. இவ்வாறு பாடும் பழக்கம் பெரும்புலவர்க்கு அமைவது என்பதைச் கம்பர் பாடலாலும் காணலாம்.

தயரதன் தன் மகனுன இராமனை விசுவாமித் திரருடன் அனுப்ப உறுதி கொண்டு, அவனே அழையுங்கள், என்று கூறுகையில்,

"திருவின் கேள்வனக் கொணர்மின் சென்று”

என்று கூறியதாகக் கம்பர் தம் நூலில் பாடுகிருf. இது பின்னல் இராமன் சீதையை மணத்தற்கு ஒரு நற்குறி வாக்காக உள்ள பொருள் தொடர் அன்ருே!