பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

ஆகவே, அப்பூதியார் அப்பரை இங்ங்ணம் வேண்டத் தாண்டகவேந்தராம் அப்பரும் தடை யின்றி எழுந்து கைகால்களே விளக்கித் திருந்து மோர் ஆதனத்தில் அமர்ந்தார்; அமர்ந்த பின்பு எவரிக்கும் திருநீறு அளிக்கையில், 'மூத்த மகனை யும் காட்டுவீர்,' என்றனர்,

ஆ! என்னே சேக்கிழாரின் பாநயம்! "மூத்த திருநாவுக்கரசு யாண்டுளன்? அவனைக் காணப் பெற்றிலோமே! அழைமின்,” என்று க ழ ரு து

காட்டும் என்று கூறியது தெய்வத்திருவருளால் எழுந்த மொழியன் ருே காட்டும்’ என்னும் சொல் ஒளித்து வைக்கப்பட்ட தைக் காட்டுமாறு ஆணை யிடுவது போன்றதன்ருே ? இதற்கு அப்பூதியார் யாது விடை கூற வல்லார்? பொய்ம்மை கூறவும் அவர் உள்ளம் பொருந்தவும் இல்லை; வாய்மை கூறவும் அவர் வாய் வரவும் இல்லை; இரண்டிற் கும் இடையே, ‘'இப்போது இங்கு அவன் உத வான்,' என்றே'விடை தந்தார். 'இப்போது இங்கு அவன் உதவான்,' என்றதல்ை, பின்பு திருவருள் துணை புரியுமேல், அவன் உதவக்கூடும் என்னும் குறிப்புத் தோன்றுதல் காண்க. "இங்கு உதவான்’ என்பதால் அங்கு-அதாவது இன்பநிலை துய்க்கும் மோட்ச உலகமாகிய அங்கு-அவன் உதவுவான்’ என்னும் குறிப்பும் தோன்றுகின்றது அன்ருே ?

இந்நிலையில் அப்பர் உள்ளத்தில் ஏதோ தடு மாற்றம் நிகழ, அவர் அந்தணர் பெருமான அன் புடன் நோக்கி, ‘ஐயரே, "இப்போது இங்கு உத வான்?’ என்னும் மொழியை என் உள்ளம் ஏற்காது.