பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

மெய் விரித்து உரையும்,” என்று வற்புறுத்தி வேண்டினர். இந்நிலையில் பெற்ருேர் மனம் தளர் வுற்றனர். இத்தளர்வு மைந்தர் இ ற ந் த த ன் பொருட்டு அன்று; பெரியவர் அமுது செய்யும் பேறு இழக்க நேர்ந்ததே என்பதற்கே ஆகும். மெய் விரித்து உரையும், என்னும் தொடர் அப்பூதியார் இன்னமும் மறைத்துப் பேசுதற்கு இடந்தந்திலது. அவர் வாய்மை தெளிவுற உரைக்க வேண்டும் என்னும் சீலத்தராய் மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார். உற்றது என்னும் சொல்லின் பொருளை நாமே உணரப் புலவர் புகன்று சென்ருர். உற்றது என்பது நடந்தது என்னும் பொருளது. நடந்தது யாது? பாம்பு கடிக்க ழைந்தர் இறந்தது ஆகும். இதனை ஏன் சேக்கிழார் விளக்கமாகக் கூறினரல்லர்? சொல்லின்றிச் சோர்வு கொண்டனரோ ? அன்றி அறிவு சோர்ந்து இவ்வாறு அறைந்து சென்றனரோ? இரண்டும் அல்ல. வேறு என்ன ? இன்னுேரன்ன் நிகழ்ச்சிகளை அடியவர்கட்கு நேர்ந்த, அல்லல்களைச் சேக்கிழார் தம் வாயால் கூறக் கூசுவர். இஃது. இவரது இயற்கைப் பண்பு. மெய்ப்பொருள் நாய ஞர் வரலாற்றில் கைதவன் (வஞ்சகனை முத்த நாதன்) தன் உண்மை வடிவை மறைத்துச் சென்று அரசரைக் கத்திகொண்டு குத்திக் கொன்றதைக் கூறுகையில்,

"தான்முன் கினைந்தஅப் பரிசே செய்ய’

என்று பாடி முடிக்கின்ருர். "தான் முன் நினைந்த அப்பரிசு’ என்பது மெய்ப்பொருளாரைக் கொல்ல. வேண்டும் என்னும் எண்ணம் அன்றி வேறன்று.