பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கணவனுரைத் திருத்திய காரிகையார்

திருத்துதல் என்பது ஒருவர்பால் தீமைகண்டும் அது மேலும் மேலும் பரவ ஒட்டாமல் அவர் நல் வழிப்படுவதற்கு முன்னின்று நன்மையின் நன்மை யையும் தீமையின் தீமையையும் எடுத்துக் காட்டித் திருத்துதல் நல்லது ஆகும். இப்பண்பை ஆடவர் முன்னின்று திருத்தினும் திருத்தலாம்; பெண்டிர் முன்னின்று திருத்தினும் திருத்தலாம். ஈண்டு அம்மையார் ஒருவர் தம் கணவரது தீய ஒழுகலாற் றைக் கண்டு தாம் பொறுக்க இயலாது திருத்திய செயலைச் செவ்விதின் ஆராய்வோமாக.

“ஆடவர், எதையும் செய்யலாம்; எவ்வாறே னும் நடக்கலாம், என்னும் உள்ளம் கொண்டவர். நாம் அதில் தலையிடுதல் ஒண்ணுது. கல்லானுலும் கணவன், புல்லானுலும் புருடன்,” என்று எண்ணி இல்லக் கிழத்தி இருப்பாளாயின், அவளே வாழ்த் கைத் துணைவி என்று கூறுதல் இயலாது. அவ் வாறு எண்ணுதல் மாதராக்குத் தனிப்பெரும் பண்பு என்று கொண்டாலும், கணவனுர் நல்வழிப்பட நடத்திவைத்தலும் அவர்கள் பண்பெனக் கொள்ளு தலும் அறிவுடைமையாகும்.

சிதம்பரம் என்பது சீரிய பதி. அப்பதியின் மாண்டைக் கூறப்புகுந்த ஆளுடைய பிள்ளே யார்,