பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

கருத்து. உலகில் சிலர் செல்வம் இருந்தால் மட்டுமே சிரிய அறத்தைச் செய்ய இயலும் என்று எண்ணித் தம்மால் இயல்வதையும் இயற்ருது வாளா நாளைக் கழித்து வருவர். அக்குலாலளுர், அத்தகையவர் களின் கூட்டத்தைச் சார்ந்தவர் அல்லர்; என் கடன் பணி செய்து கிடப்பதே, என்னும் கொள்கை புடன், மெய்யன்புடையவர்க்குத் தம் மா லா ன தொண்டு புரிந்து வந்தனர். தம் குலத்தொழிலாகிய மட்பாண்டம் செய்யும் பணியில் ஈடுபட்டுப் பிச்சை ஏற்றுப் பிரானைப் போற்றும் அடியவர்கட்கு மண் ஒடு கொடுத்து மகிழ்ந்து வந்தார். இதுவன்ருே நல்லறத்தின் தன்மை? அறுவை (ஆடை) வணிகர் வறுமையாளர்க்கு ஆடையளித்தும், அவ்வாறே ஏனேயே அகதிகளுக்கு அன்னம் அளித்தும் அறங்களே ஆற்றி வருதல், ஏழை எளியவர்களும் உயிரும் உடலும் வளர்க்க உறு துனே யாகும் அன்ருே ? இன்ைேரன்ன பண்பு நிறைந்தவர் சோழநாட்டுக் குடியினர் என்பதை எண்ணியன்ருே தெய்வச் சேக்கிழார்,

சாதிகள் நெறியில் தப்பார்

என்று செப்பியுள்ளார்?

குலாலனர் இன்குணம் படைத்தவர் என்பதைச் சேக்கிழார் பெருமான்,

வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார்’

என்றும்,