பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

காதளுர் கழல்கள் வாழ்த்தி வழிபடும் கலத்தின் மிக்கார் என்றும்,

  • பொய்கடிக் தறத்தின் வாழ்வார் ’

என்றும்,

மெய்யடி யார்கட்கான பணிசெயும் விருப்பின் நின்ருர்

என்றும்,

  • மனையறம் புரிந்து வாழ்வார் ’ என்றும் கூறிப் போந்தார். இவ்வாறு அவ்வன் பரைப்பற்றிப் பேசிய சிறப்புக்களுள் பல அரிய பொருட்குறிப்புக்கள் அமைந்திருப்பனவேனும், ஈண்டுச் சேக்கிழார் பெருமாளுர் அவ்வன்பரின் குலத்தைச் சிறப்பு முறையில் பேசியதை மட்டும் விரித்துக் கூற வேண்டியுள்ளது. குலாலனுர் என் பார் மண்ணைக் கையால் பிசைந்தும், காலால் மிதித் தும், மரக்கருவியால் தட்டியும், தகடுகொண்டு அறுத்தும் மற்றும் பல்லாற்ருனும் செய்யும் செயல் களைக் கற்பனை உலகில் வாழும் கவிஞர்கள் எண்ணி, ‘மண்ணிடத்து இவர்கள் பெருங்கோபம் கொண்டு இங்ங்னம் செய்கின் ருர்கள் போலும் ! என்று கருதி இவர்களை வேட்கோவர் ' என்று குறிப்பிட்டுப் பேசுவர். வேள்” என்னும் சொல் மண் என்னும் பொருளேத் தருவது. இப்பொருளிலேதான் உழவர் கட்கு வேளாளர் (வேள்-ஆளர்) என்ற பெயரும் வழங்கப்பட்டு வருகின்றது. ஆகவே, குலாலர் குலத்தவரைக் குறிக்க வேட்கோவர் குலம் என்று கூ று த ல் சாலவும் பொருத்தமானதே. ஆணுல்,