பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

அருண்மொழித்தேவர் இக்காரணம் கருதி மட்டும் * வேட்கோவர் குலத்து வந்தார்,' என அவ்வன் பரைக் குறிப்பிட்டிருப்பதாக நாம் கருதுவதற்கு இல்லை. அவ்வன்பர் வாழ்க்கை வரலாற்றுக் குறிப் பினே நம் தொண்டர் சீர் பரவுவார் முன்னரே நன்கு அறிந்திருந்தார் ஆதலின், அவ்வாழ்க்கைக் குறிப் பின் கருத்தினைக் கொண்டே வேட்கோவர் குலத்து வந்தார்’ என்று கூறினர். அஃதாவது, மன்மதன. யும் கோபிக்கும் குலத்தவர் என்பதே அக்குறிப்பினை உணர்த்தும் கருத்து. வேள் என்னும் சொல் மன் மதன் என்றும் பொருள் தரும். இவ்வாறு இவ் வன்பர் மன்மதனேக் கோபித்த குறிப்புப் பின்வரும் நிகழ்ச்சியைக்கொண்டு உணரப்படும்.

நீருக்கு நுரையும், பூவுக்குப் புல் லி த ழும், நெல்லுக்கு உமியும் இருப்பது இயற்கை. அது போல, அக்குலாலர் அன்பர் பணியும் அரன் பூசை நேசமும் ஒருங்கே உடையவரேனும், இன்பத்துறை யிலும் சிறிது எளியவராய் விளங்கினர். இதற்குக் காரணம் அவரது இளமைக்கூறேயாகும்.

  • இளமைமீ தூர இன்பத் துறையினில் எளிய ராஞர் என்றே சேக்கிழார் செப்பினர். இதனுல், தம் கற்பிற் குரிய மனைவியாருடன் வாழ்க்கையை நடத்தும் போதும், மற்ருெரு மாதரார்மீதும் தம் உள்ளத்தை அவர் வைத்திருந்தனர் என்பது பெறப்படுகிறது.

குலாலர்க்கு அமைந்த இல்லக் கிழத்தியார்

எழிலால் இழிந்தவர் அல்லர். அவ்வம்மையார் தேனலர் கமலப் போதின் திருவினும் உருவின்