பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

மிக்கவர்; பூண் தயங்கு இளமென் சாயல் பொற் கொடியனேயவர்; கற்புக்கோர் உறைவிடம்; வடமீன் (அருந்ததி) அன்ன கற்புடையவர். இன்ைேரன்ன உடற்பண்பும் உளப்பண்பும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவராய் இருந்தும், அக்குலாலப் பெருந்தகை யார் சிற்சில சமயங்களில் வேறு ஓர் மாதுடன் உறைவாராயினர். தம் கணவனுரது செய்கையை அக்காரிகையார் அறிந்தார். தம் கணவனுர் செய்கை தவறு என்பது அவர்தம் கண்ணிலும் கருத்திலும் பட்டது. இதனுல், தம் வாழ்வு குறைந்தது என்பதற் காக அவர் வருந்தினர் அல்லர். இதல்ை தம் கணவனுரது மானம் ஈனமாமே என்று தம் கருத்திற்கொண்டார்; தம் கணவனுரை எவ்வாறே னும் இப்பழக்கத்தினின்று விலக்க உள்ளங்கொண் டார்; இது செய்ய இயலவில்லை எனில்,

  • தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்

என்று வள்ளுவர் கூறும் வாய்மொழிக்குத் தாம் இலக்கியமfய் அமைய இயலாதென்று எண்ணினர். இக்குறட்பாவின் பொருள், தன்னைக் கற்பினின்று வழுவாது காத்துத் தன் கணவனையும் தீய வழியில் போக ஒட்டாமல் அவனுக்கு வேண்டுவதைச் செய்து பழிச்சொல் வாராமல் காப்பவளே பெண் ஆவாள்," என்பது.

அம்மாதரார் இல்லற நெறிகளில் சிறிதும் வழுவி ஞர் அல்லர். உணவு சமைப்பர் ; படைப்பர் ; ஆல்ை, தம் கணவருைடன் இணைந்து இன்முகம் காட்டி இன்புறு நிலையை அறவே ஒழித்தார். கண