பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

வர்ை அவ்வம்மையாரது பிணக்கத்தை நீக்கவேண் டிப் பணி மொழி பலவும் கூறி, இரந்தும் பார்த்தனர். அம்மையார் இணங்கினர் அல்லர். கணவனுர் ஒரு முறை வலிந்து தம் மனவியாரைப் பற்ற முயன்ற னர். உடனே அக்காரிகையார் சிறிதும் தயங்காது, * எம்மைத் திண்டாதீர் ! தீண்டுவீரேல், திருநீல கண்டத்தின் மீது ஆணே,’ என்றனர்.

திருநீலகண்டத்தின்மீது ஆணே என்றதும் திகைத்தனர் அவ்வன்பராம் குலாலணுர் : அல்லும் பகலும், திருநீலகண்டம், திருநீலகண்டம் என்றே. அத்திருநாமத்தை இடையறது எண்ணுபவரானர். அதளுல் அவர்க்குக் திருநீலகண்டத்தின் மீது தணியா வேட்கை உண்டாயிற்று.

திருநீலகண்டம் என்பது அரளுருக்கு அழகு செய்யும் மிடறு, அது தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலேக் கடைந்த ஞான்று எழுந்த ஆலத்தை விழுங்கி அடக்கிக்கொண்ட குறியாகும். அன்று அவ்வாலத்தை அவ்விறைவர் தம் கழுத்தில் அடக்கிக் காத்திலராயின், தேவர் பலரும் மறைந்தே இருப்பt. அக்கருத்தினைக் கவிஞர் கருதிக் கவியும் புனைந்தனர். நஞ்சின் கொடுமையையும் நாதரின் அருளையும் திருநாவுக்கரசர்,

அருள்கொடு மாவி டத்தை

எரியாமல் உண்ட அவன் அண்டர் அணடர் அரசே ”

என்று அன்பு கனியப் பாடிய தேவாரத்தால் அறிய லாம். இவ்வாறு இறைவர் நஞ்சையுண்டலே அருளிச் செய்திலர் ஆயின், தேவ மாதர் தம்