பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

அருமையாகும். அம்மையார் மெய்யுறு வாழ்வு நடத்திலராணுலும், கணவனுரைப் போ ற் றும் கருத்தில் மட்டும் தவருதவராய் நடந்து,

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் என்பதற்குத் தாம் ஓர் எடுத்துக்காட்டாய் இலங்கி வந்தனர்.

கணவன் மனைவியருக்குப் பிணக்கு வருதல் உண்டு. இதனைத் தமிழ் இலக்கணம் ஊடல்’ என்று உரைக்கும்.

ஆல்ை, திருநீலகண்டனுர்க்கும் அன்னர் திருந்திழையார்க்கும் உற்ற பிணக்கு, நாள் கடந்து, வாரம் பல சென்று, திங்களும் எண்ணில தீர்ந்து, ஆண்டுகளும் பலவாகத் தொடர்ந்து இருந்தது. இதல்ை அவர்கள் உடன் உறை வாழ்வின்றி ஒழு கலானுர்கள். அவ்விருவரும் எது முதல் எது வரை இன்னணம் இருந்து வந்தனர் என்பதைக் கற். பனைக்கு ஊற்ரும் துறைமங்கலத் துறவியார் சிவப்பிரகாசர்,

புணரியுண் டெழுந்த புயல்கிகள் வளர்குழல் அஃதுளு முகில்போன் றழகுறுங் காறும் ” என்று அழகுறத் தெளிவித்துள்ளார். அஃதாவது, அம்மையாரது கருங்குழல் சூல் கொண்ட மேகம் போன்று இருந்த இளமைக் காலந் தொட்டுக் கரு வுருத வெண்முகில்போல முடிதுலங்கும் காலமாகிய முதுமைப்பருவங்காறும் இந்நோன்பினே மேற் கொண்டனர் என்பதாம்.