பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இவ்வாறு பல்லாண்டுகள் கழிந்தும் கருத்துக்கு உகந்த காரிகையார் தமக்கு இட்ட கட்ட்ளேயைத் தட்டினரில்லை திருநீலகண்டர்; மாதரார் பிறரை மனத்தாலும் எண்ணினர் அல்லர். இத்தகைய சீரிய செயலே அவ்வம்மையார் செய்தமையின், அம் மாதராரைக் கணவனுரைத் திருத்திய காரிகையார் என்று கருதிக் கூறியது சாலவும் பொருத்தமே அன்ருே ?

திருநீலகண்டனர் செயல் அரிய செயல்; பெரிய செயல். இளமை மீதுார இன்பச் செயலில் எளிய ராய் அவர் அணங்களுர் இட்ட ஆணேக்கு அடங்கி நடந்தார் எனில், அவர் பண்பாட்டை என்னென்று இயம்புவது ! இந்த அருமைப்பாட்டை எண்ணி இறும் பூதெய்திய முற்றும் துறந்த முனிவராம் பட்டினத்தடிகளார்,

“மாதுசொன்ன சூளான் இளமை துறக்கவல் லேன் அல்லன்’

என்று பாராட்டிப் பேசினர். சூள் என்பது ஆணே.