பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. உத்தி கூறிய உத்தமியார்

மாதரார் தாம் மணந்த காதலர்க்கு அன்னே யாகவும், அடியார் ஆகவும், அமைச்சராகவும் அமைகின்றனர். அறுசுவை உண்டியை அட்டு (சமைத்து) அருமைக் கணவனுரை அருத்துதலின் அன்னையர் ஆ கி ன் றனர்; அகமுடையாருக்கு ஆவன செய்யும் தொண்டினே உளம் கோணுது இயற்றலின், அடியார் ஆகின்றனர்: உறுங்கவல் ஒன்று உற்றுழி, உத்தி கூறித் தம் கணவருக்கு ஊக்கம் அளித்தலின் அமைச்சர் என்னும் அருநிலை பெறுகின்றனர். இவையனைய அருங்குணங்கள் ஒருங்கே மங்கையரிடம் மண்டிக் கிடத்தலின், இவரை இழந்தால் எல்லா நலனும் இழக்க நேரிடும் என்பதை உளங்கொண்ட நம் முன்னுேர்,

பொற்ருலி யோடெவையும் போம் .

என்னும் பொன்னுரையையும் புகன்று சென்றனர். இந்தப் பண்பு அமைந்த அம்மையார் ஒருவரின் வாழ்க்கைக் குறிப்பை வரைவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

தமிழகத்தின் சிற்றுார்களில் இளையான் குடி’ என்பது ஒர் இனிய பதியாகும். அச்சிற்றுார், குடி மக்கட்செறிவு (நெருக்கம்) குறைவறப் பெற்றது. அங்குள்ள குடிகள் எதற்கும் இளையாத ஈர நெஞ்சி னர். அக்குடிமக்களுள் மாறஞர் என்னும் மாண்