பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

தாம் மேற்கொண்ட வி ர த ம் எவ்வகையிலும் கெடாதவாறு, தம்மால் ஆன உதவியைச் செய்து இசை (புகழை) நிறுவுபவரே மாந்தர் என்னும் பண் புக்குரியவர் ஆவார்; அன்றேல், பெரியர் என்ருே, சீரியர் என்ருே செப்ப இடம் பெருதவராய்ப் பொது மக்கள் என்னும் பெயர் அளவில் நிற்பர். ஒருவர் பெரியர் ஆதற்கும் சிறியர் ஆதற்கும், அவர் செயல் களே சிறந்த காரணங்கள் ஆகும்.

தன்னைத் தலையாகச் செய்வானும் தான் '

என்று தமிழ் நூல் சாற்றுவதும் இக்கருத்தைப் பற்றி யதே ஆகும். அரிய செயலே மக்கள் ஆற்ற முற் படுகையில் அரிய சோதனைகளும் ஏற்படும். அக் காலத்திலும் மனம் தளரல் அடாது. தளர்ச்சி யைக் கொடுக்க இயற்கைச் சூழலும் இடங்கொடுக் கும். அக்காலங்களில் நெறி தவருத மாந்தர் அதனையும் எதிர்த்துத் தங்கள் கொள்கையை நிலை நிறுத்துவரேல் நிலவுலகில் நீடு பயன் எய்துவர்.

இத்தகைய சோதனைக்காலம் மாறஞர்க்கும் நேர்ந்தது. அவரது செல்வம் மெல்ல மறைந்து, அவர்க்கு நல்குரவை (வறுமையை)த் தந்தது. இதனைக் கவிஞர் கூறுகையில்,

  • செல்வம் மேவிய நாளில் இச்செயல்

செய்வ தன்றியும் மெய்யிஞல் அல்லல் நல்குர வான போதிலும் வல்லர் என்றறி விக்கவே ஒல்லை யில்வறு மைப்பதம் ” வந்ததாகக் கூறுகிருர். அறிஞர்பால் அமைந்த வறுமையாதலின், சேக்கிழார் அதனையும் ஒரு பதவி

6