பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

போல அவர்கள் கருதுவார்கள் என்பதைக் காட்டு வார்போல வறுமைப் பதம் என்று கூறியதை நாம் ஆழ நினைந்து அதன் பொருளே நன்கு அறிந்து உணர வேண் டுபவராய் உள்ளோம். மாறனும் வளஞ்சுருங்கினும் மனஞ்சுருங்குதல் இலராய் ஏழை எளியவர்களின் அழிபசியைத் தம்மால் கூடிய முறையில் தீர்த்து வந்தார்.

வறுமை நோய் உழந்த வள்ளலாம் மாறனுர் தாம் இருக்க வீடும், விதைக்கச் சிறு நிலனும் தவிர்த்து ஏனேய செல்வங்கள் யாவும் இழந்து நின்ற வாழ்நாளில் இறைவனுர் முதுமைக்கோலத்தோடு மாறனுர் வீடு தேடி வருவாராயினுர். அவர் வரு கின்ற நேரமோ, இருள் அடர்ந்த கங்குல் காலமாம் கார் காலம். ேம க ம் உள்ளி உள்ளவெலாம் உவந்தீயும் வள்ளியோரின் வழங்கிச் சிறிது சலித்து நின்ற நேரம். வரும் முதியவரின் கோலமோ, தள் ளாடித் தளர்ந்து வரும் கோலம். முதியவர் பசிப் பிணி விஞ்சியவராய்ச் சோறு கருதி மாறனர் இல் லத்திற்கே சோர்ந்து வந்து சேர்ந்தார்.

மாறனர் அம்முதியவரைக் கண்ணுற்றதும் முதலில் உதவி செய்ய முனைந்து நின் ருர்; அவரது ஈரமேனியை ஈர அன்புடன் துளய ஆடை ஈந்து துவட்டச் செய்தார்; வீட்டினுள் ஆசனத்தில் அமர்த்தினர். வந்த முதியவர் பசியைப் போக்க வழி தேடலாயினர். மாறனுர் தம் வீட்டில் உணவு இன்மையை நன்கு அறிவர்; என்ருலும், வந்த விருந்தினருக்கு எந்தவிதத்திலும் உண்டி கொடுத்து உ த வ ேவ ண் டு ம் என்று உளங்கொண்டார்.