பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ’ என்னும் பண்டைத் தண்டமிழ்த் தொடர், அன்று இல்லத்திற்கு வந்த முதியவர் நிலைக்கு மிக ஏற்றது என்பதையும் நன்கு அறிந்தார்; ஆகவே, தம் வாழ்க்கைத் துணைவியாராகிய தம் இல்லக்கிழத்தி யாரோடு இது பற்றி யாது செய்வதெனச் சிந்திப்பார் ஆயினுள்.

அவ்வம்மையார் பொருந்து கல்வியும் அறிவும் பூத்திருந்த காரணத்தால், வருந்தி வந்தவர்க்கு விருந்தளிக்க வேண்டுவது தம் தலையாய கடன் என்று கணவனுர் கருத்துக்கிணங்க இசைந்தார். ஆல்ை, அவ்வம்டிையார்க்கு மட்டும் ஒரு கவலை ஏற்பட்டது. அது, ' நாம் பரம ஏழைகளாகிவிட்ட தால், அக்கம் பக்கத்தவரும் ஆதரித்து எதுவும் தர முன் வாராரே ! மேலும் இரவு வேளேயாய் இருத்த லின், எங்குச் சென்று மன்ருடி உதவி பெறுவோம்? என்பதே. என்ருலும், அறிவு மீதுாரப் பெற்ற அவ்வம்மைப்ாருக்கு இறைவரது அருட்டிறத்தால் திடுமென ஒரு சிந்தனே எழுந்தது. அவர் தம் கன வளுரை நோக்கினர்; ' காதலரே, நம் வறுமை நீங்க இன்று நம் செய்யில் (வயலில்) நெல் விதைத் தனம். அவை இது போது மழை பெய்த காரணத் தால் வெள்ளத்தில் மிதந்து கிடக்கும். அவற்றை நீர் வாரிக் கொணரின், வல்லவாறு சோறு சமைத்து விருந்தினரை உபசரிக்கலாம்,' என்றனர். இதைக் கேட்ட மாறனுர்க்கு என்றும் இல்லா இன்பம் உண் டாயிற்று, அவர் நடுக்கடலில் திசை கெட்டு மயங் கும் ஒரு மாலுமிக்குக் கரை ஒன்று காணப்பட்டாற்