பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

போலக் கழிபேருவகை பூத்தார்; இருளென்றும் மழையென்றும் பாராதவராய் இடாவினைக் (இறை கூடை) கையிற்கொண்டே வெளிக் கிளம்பினர்.

மாறனுர் வந்து கண்ட போது அலகையும் (பேயும்) அஞ்சும் அத்துணை இருள் அடர்ந்திருந் தது. மைக்குழம்பை வாரியிறைத்ததுபோல இருள் காணப்பட்டது. புள்ளும் விலங்கும் உறங்கும் அப் பேரிருளில் அவர் குறி வழியே நெறி தேடித் தம் நிலத்தையடைந்தார்; தம் மனத்துக்கினிய மனைக் கிழத்தியார் கூறியாங்கு விதை நெற்கள் மழை மிகுதியால் மேலே மிதந்துகொண்டிருந்தன. அவற் றுள் தாம் எவ்வளவு திரட்ட, இயலுமோ, அவ் வளவையும் திரட்டிக் கூடையில் சேர்த்துக் கொண்டு அவ்விருளிலேயே வீடு திரும்பினர்.

உத்தி கூறிய உத்தம மாதரர் கணவனுt வருகை நோக்கிக் கடையகத்துக் காத்து நின்றிருந் தார். இருளேயும் எழிலியின் குமுறலையும் (மேகத் தில் எழும் இடியையும்) கண்டும் கேட்டும் நெஞ்சம் துணுக்குற்ருரேனும், தம் கணவர் கொண்ட விரதம் பழுதுருமல் வீடு நோக்கி வந்த விருந்தினரை உண் பித்து உபசரித்தலே தமக்குப் பெரும்பேருகும் என்று கருதினர்; கணவனுர் கொண்டு தந்த சேற்று டன் கலந்த செந்நெல்லே ஒரு பாத்திரத்தில் பெய்து அலம்பினர். நெல் ஈரம் செறிந்து மெத்தென்றி ருந்தது. அப்படியே சமைப்பின் சோறு குழம்பி விடும் என்று எண்ணியவராய் அவற்றை முதலில் சூடேற்றி வன்மையாக்கச் சமையல் அறைக்குட் புக்கார். அந்தோ! அவர்களின் வ று ைம க்