பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

கொடுமைதான் இருந்தவாறு என்னே! அவர், அடுப்பில் தீமூட்ட விறகில்லேயே !’ என்று கணவ. ஞர் முகத்தை நோக்கினர். அக்குறிப்புணர்ந்த மாறனர் தம் வீட்டுக் கூரையிலிருந்து சில மரத் துண்டங்களே அறுத்துக் கொடுத்தனர் ; மனேயின் அலக்கு அறுத்துத் தள்ளப்பட்டால் தம் அகத்தின் அந்தம் குறையுமே என்றுகூடக் கருதினர் அல்லர்: அருமைத் தொண்டரின் பசியைப் போக்கின், அதுவே தமக்கு அழகு என்று அகத்துள் கொண்டார்.

மாறனுர் மனேவியார் அடுப்பில் தீ மூட்டினர்; ஈர நெல்லின் தண்மையைப் போக்கி, வெம்மையை ஊட்டினர்; அரிசியாக்கி உலையிற்பெய்து நல்லமுது ஆக்கி அமைத்தார். நல்ல அமுது செய்ததன் பின் கறியமுதுக்குக் கருதுவார் ஆயினர். மாறனர் பால் மாதரசியார் கறியமுதுக்கென் செய்வதென்று விண்ணப்பித்தபோது மாறஞர் ஞெரேலெனப் புறக் கடை சென்ற், கீரைப் பத்தியிலிருந்து சிறிது கீரை யைப் பறித்து வந்தனர்.

கீரையைப் பெற்ற ஏந்திழையார் வறிஞனுக்குப் பொற்கிழி கிடைத்தாற்போல மனம் மகிழ்ந்தவராய், அதை ஒரு பாண்டத்தில் இட்டு முன்னர் நன்கு அலம்பினர்.

இங்கு நாம் சிந்தனை செய்ய வேண்டுவன பல உள்ளன. மாறனுர் மனைவியார் அட்டில் (சமை யல்) தொழில் ஆற்றுவதிலும் எத்துணையோ கைதேர்ந்தவராய் உள்ளார் என்பது தெரிகின்றது.