பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

ஈரம் மிக்க நெல் இனிய சோறு சமைக்க இடந் தாராதே என்று எண்ணித் தீமூட்டி அதனைச் சிறிது வறுத்தெடுத்தார்; பின்பு கீரைக்கறி கொணர்ந்த போது அது நிலத்தில் படரும் பயிர் ஆதலின், மண் மிகுதியாகக் க ல ந் தி ரு ப் பி ன் உண்ணுவதற்கு ஒண்ணுதே என்று அதனைப் போக்க அலம்பி எடுத் தார். இன்ளுேரன்ன பண்புகள் மாதர் கட்கு இன்றி யமையாத அட்டிற்பண்புகளாக இருக்கவேண்டும் என்பதற்கு அவ்வம்மையாரைப் போன்றவர்கள் வழி காட்டிகளாய் இருக்கின் ருர்கள். இன்ன பண்பு வள்ளுவனுரின் வாழ்க்கைத் துனேவியார் வாககி அம்மைய ரிடத்தும் அமைந்திருந்தது. அதனுலே தான் அந்த அம்மையாரின் அட்டில் தொழிலை வியந்த வள்ளுவளுர் அடிசிற்கினியானே !’ என்று பாடுவாராயினர். அவ்வருந்தொடரை இவ்வம்மை யார்க்கும் சார்த்தி வழங்கலாம் அன்ருே !

மாறனர் மனைவியார் அட்டில் திறம் இத்துடன் நிற்கவில்லே. மாறனுர் கொணர்ந்த கறி உணவு கீரை ஒன்றே. அவ்வொன்றைப் பலவாகச் சமைத் துப் பாகம் செய்ததுதான் நாம் பாராட்டுவ தற்குரியதாகும். அக்கீரைக் கறி ஒன்றே கூட்ட லாகவும், துவட்டலாகவும் தம் கைவன்மையோடு அறிவு வன்மையையும் கூட்டி ஆக்கி அமைத்தார் எனில், நாம் அவ்வம்மையாரை எவ்வாறு புகழ்வது ! அவ்வம்மையாரின் கைவன்மையை வியந்த புலவர்

  • கைவிண்மை யினில்வேறு வேறுகறி யமுதாக்கி ' என்று பாடிப் பரவசமுறுவார் ஆயினர். இல்லது