பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

என் இல்லவள் மாண்பானுல் ?’ என்பது உண்மை

யன்ருே ?

அம்மையார் உணவு சமைத்துக் கறியமுதாக்கி முடித்த பின், வந்த விருந்தினர் நாம் வளத்துடன் வாழும் காலத்தில் வந்திலரே! இவர்க்கு இவ் வெளிய உணவு ஈயும் காலம் நேர்ந்ததே! என்று உளம் நொந்தார்; பிறகு பசிக்களைப் பால் பாயில் துயின்ற பெரியாரை எழுப்பி அன்புடன் உணவு அருந்த அழைத்தனர். இ ல் வி ரு பேரன்பின் உடலங்கள் உள்ளன் பால் உழைத்துச் செய்த அனைத்தையும் அறிதுயில் கொண்டு அறிந்தவராய் ஆண்டு வந்திருந்த இறைவனுர், கரந்து அவ்விரு வர்க்கும் அம்மையப்பராய்க் காட்சி தந்து ஆசி கூறிஞர்.

அன்று முதல் மாறனுரும் மாதராரும் நாளுக்கு நாள் வறுமை நீங்கிப் பெருமை புெற்றுப் பின்பு நீடுவானில் நித்தராய் விளங்கினர்.

மாறனுர் நித்தராய் நீடூழி வாழ்வதற்குப் பெருந் துணை புரிந்த பெருமை யாரைச் சாரும்? நெல் கொணர உத்தி கூறி, கொணர்ந்த நெல்லே வறுத்து அரிசியாக்கிச் சமைத்து, கொணர்ந்த கீரையை நீரில் அலம்பிப் பல வகைக் கறியமுதாகச் சமைத்த அம் மையாரை அன்ருே சாரும் ? அவ்வம்மையார் இவ் வாறு செய்திலர் எனில், மாறனர் மாண்பு பெற இயலுமோ ? இயம்புமின் !