பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

இப்பண்புகள் வாய்க்கப் பெற்ற பெண்கள் சமூகத்தைச் சார்ந்தவர் கலிக்காமர் என்பாரின் தேவி யார். அவ்வம்மையார் எங்ங்ணம் நடந்துகொண்ட னர் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வண்புகழ் கொண்ட சோழ வளநாட்டில், திருப் பெருமங்கலம் என்னும் பெயரிய பெரும்பதி சிறப் புடன் விளங்கியது. இது பொன்னி (காவிரியாறு) பொன் கொழிக்கும் வடகரைக்குக் கீழ் ப் பா ல் உள் ளது; கொடிமாட நெருக்கத்திற்கொரு குறையும் இல்லாதது; மஞ்சு சூடும் இஞ்சியும் (மதிலும்) வரை மருளும் வளமார் மாடியும் உடையது. ஆண்டுள வீதிதோறும் விழாக்கள் நடந்து வந்தன. முழவின் ஒசைகள் அரங்கெலாம் ஒலித்தன. இன்னுேரன்ன வளமுடைய எழிற்பதிக்கண் ஏயர் கோக்குடி ஒன்று ஏற்றமுற்றிருந்தது. அக்குடி உழவருத உத்தமக் குடி; வளவர் தானேயை (சோழர் சேனையை) வள முற நடாத்தும் சேனதிபதி குடியென்று செப்பும் நலனும் சிறக்கப்பெற்றது. அக்குடிக்கொரு விளக் கம் போலவும் பன்மீன் (நட்சத்திரம்) நடுவண் பான் மதி போலவும் கலிக்க மர் என்னும் கண்ணியர் தோன்றினர்.

கலிக்காமர் அரளுர் அடியை மறவா அன்பினர். அவர் வாழ்பதிக்கு அண்மையதான திருப்புன்கூர்த் திருப்பதியிடம் தீராக் காதல் உடையவர்: அதற்கு ஆய திருப்பணி பலவும் ஆற்றும் விருப்பு மிக்கவர். அவர்க்கு வாய்த்த மனைவியாரோ, பதி சொல் தவருப் பான்மையராய்க் கற்புக் கடம் பூண்ட