பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

காரிகையாராய் இலங்கினர். ஆகவே, அக்காதல் மனேவியாரும் காதலரும் மாறின்றித் திதில் கருமங் கள் இயற்றி இனிது வாழ்ந்து வருவாராயினர்; இறைவரின் கழல்களேயே துணை எனப் பேணி வந்தனர். இது நிற்க.

வன்தொண்டப் பெருந்தகையாராம் சுந்தரருக் கும் பரவையார் என்னும் பாவையர்க்கும் ஊடல் சிறிது உளதாயிற்று. அதனைத் தீர்க்கப் பரவையார் கணவனுர், பரமரையே துாது போக்கிப் பரவையார் பிணக்கைத் தீர்த்துக் கொண்டார். இதனைக் கேட் டனர் கலிக்காமர். வேதமும் காணு விமலரைப் பாதம் நோவத் துாது செல்ல விடுத்தது பாவம் !" என்று கொண்டு, தம்பிரான் தோழரை (சுந்தரரை) அ. க த் து ம் புறத்தும் அறவே வெறுத்திட்டார்; வெம்பினர்; அதிசயித்தார்; வெருவினர். “எம்பி ரான் இசைந்தாரேனும் ஏவப்பெறுவதோ ! இதனை எண்ணி உள்ளம் கம்பியாதவனே யான் என் முன் கானும் நாள் எந்நாள்?’ என்று சுந்தரரைக் கானும் நாளை எதிர் நோக்கி நின்ருர்; “வரவெதிர் காண்பே ளுகில் வருவது என்னுங்கொல் ?’ எ ன் று ம் கறுவினர்.

கலிக்காமர்க்குக் கடுஞ்சினம் எழுகின்றது; ஆளுல், கடுஞ்சொல் எழுந்திலது. இன்னது செய் வேன் என்று இயம்ப எண்ணுகிருர். ஆல்ை, மனத் துக்கண் மாசிலர் ஆதலின், கடுஞ்சொற்கூற உள்ளம் கூசுகிறது. இதுவன்ருே சா ன் ருே ர் இயல்பு ? சீற்றத்தினும் செம்மை காணும் சீரியர் அல்லரோ அன்னர்?