பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மா தவம் புரிவாள் 'குறிகள் வச்சிரத்தி னோடு, கோகனகம், சுவத்தி, அறுபுள்ளி, அமுதவிந்து; அதிதெய்வம் அயன், மால், ஆதி, செறிபுகழ் ஈசனோடு, சதாசிவம் பூத தெய்வம்; நெறிதரு கலையைந்திற்கும் நிகழ்த்துவார் இந்த நீர்மை" - (2-68) இவ்வைந்தனுள் புனலை (தண்ணீரை) மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தண்ணீரின் வடிவம் பிறை நிலாவாம். உலகின் பல பகுதிகளிலும் துண்டு துண்டாக உள்ள நிலப் பகுதிகளைப் பிறை வடிவாக வளைத்திருத்தலின் இது பொருந்தும், தண்ணீரின் நிறம் வெண்மையாம். தண்ணிருக்கு நிற மில்லை என்பது இக்கால அறிவியல் கொள்கையுமாகும். எனவே, தண்ணிரின் நிறம் வெண்மை எனப் பண்டு கூறி யிருப்பதும் ஒரு வகையில் சரியே, தண்ணிரின் எழுத்து வ' என்பதாம். தண் ணிரைத் தூக்கி ஊற்றினால் ஒரளவு வெண்மையாய்த் தெரிவதைக் காணலாம். தண்ணிரின் குறி (அடையாளம்) கோகனகம் (தாமரை) என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தண்ணிருக்கும் தாமரைக் கும் உள்ள மிக்க-நெருங்கிய தொடர்பு புலனாகும். தண்ணிருக்கு உரிய தெய்வம் திருமாலாம். திருமால் நீர்க் கடவுள். நாராயணன் என்னும் பெயரின் பொருள் (நாரம் + அயணன்) நீரை இருப்பிடமாகக் கொண்டவன் என்னும் செய்தியெல்லாம், தெருவிலழகி என்னும் குப்பை மேனியைப் பற்றிய கட்டுரையில் விளக்கமாகக் கூறப் பட்டிருப்பது காண்க. மேற்காட்டிய சிவஞான சித்தியாரின் பாடல்களால், தண்ணீரே தாமரை-தாமரையே தண்ணிர் என்று சொன்னா லும் தகும் என்பது புலனாகலாம்.