பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 மா தவம் புரிவாள் குறிக்கும். தாமரை என்பது தாமரைக் கொடியையும் குறிப்பது போல, வெற்றிலை என்பது வெற்றிலைக் கொடியையும் குறிக்கும். 1.7 மண்ணில் வேந்தன் வேந்தன் என்ற பெயர் வெற்றிலைக்கு உண்டு. மண்ணில் வேந்தன் (மு.வை.அ.), மண்ணில் வேந்தன் இலை (சி.வை.அ.), மண்நில வேந்தன் (மலை) என்னும் பெயர் களும் தரப்பட்டுள்ளன. இலைகளுக்குள் பயனால் மிக்கிருப் பதனாலும், எல்லாச் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் வேந்தன் போல்-தலைவன் போல் இன்றியமையா இடம் பெற்றிருப்ப தனாலும் வெற்றிலைக்கு வேந்தன் என்னும் பெயர் இடப் பட்டிருக்கலாம். வேந்தன் அரண்மனையில் இருப்பவன்; இந்த வெற்றிலை வேந்தன், மண்ணில் முளைத்து வளர்வ தனால் மண்ணில் வேந்தன் எனவும் மண் நில வேந்தன் எனவும் பெயர் பெற்றது. மண்ணில் வேந்தன் என்பதற்கு, மூலிகை வைத்திய அகராதியில் 'அரசு வெற்றிலை என்னும் பெயர் தரப்பட்டுள்ளது. அரசு எனினும் வேந்தன் எனினும் பொருள் ஒன்றே யன்றோ? 1.8 தாம்பூலம் தாம்பூலம் என்பது வெற்றிலையைக் குறிக்கும் சொல். இலக்கிய ஆட்சியும் இது பெற்றுள்ளது: 'தக்கிண்ை தாம்பூலத்தோ டளித்து' என்பது சேதுபுராணப் பாடற் பகுதி (சேது - பல. 91). இதையொட்டி, தாம்பூலி (மு. வை. அ.), தாம்பூலவல்லி (மு.வை.அ.. சி.வை.அ.), தாம்பூலக்கண்ணி (சா.சி.பி.) என்னும் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இங்கே, வல்லி, கண்ணி என்பனவற்றிற்கு வெற்றிலைக் கொடி எனப் பொருள் கொள்ளல் வேண்டும்.