பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் | 15 1.8.1 தம்பல், தம்பலம் தம்பல், தம்பலம் என்னும் பெயர்களும் வெற்றிலை யைக் குறிக்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. கம்பராமாயணம்-பாலகாண்டம்-வரைக்காட்சிப் படலத்தில் உள்ள - மேவருங் கோபம் அன்ன வெற்றிலைத் தம்பல் கண்டார் (49) என்னும் பகுதியும், கிட்கிந்தா காண்டம் - கார்காலப் படலத்திலுள்ள, ‘’வெள்ளடைத் தம்பல் குப்பை சிதர்ந்தென விரிந்த மாதோ' (29) என்னும் பகுதியும், கலித்தொகையில் உள்ள "தையால் தம்பலம் தின்றியோ” (65) என்னும் பகுதியும், திருக்கோவையாரி லுள்ள 'பொதுத் தம்பலம் கொணர்ந்தோ புதல்வா எம்மைப் பூசிப்பதே' (396) என்னும் பகுதியும், அகத்தியர் குண பாடத்திலுள்ள காந்திதரும் புத்திக்கும் கட்குநலஞ் செய்யுமணஞ் சார்ந்தநறுந் தம்பல ரசம்' என்னும் பகுதியும் காண்க. தம்பலம் என்பது தாம்பூலம் என மாறியிருக்கலாம். சம்சுகிருத நூலில் தாம்பூலம் இடம் பெற்றிருப்பதால், தாம்பூலம் என்பது வடமொழிச் சொல் என வடமொழி யாளரால் கூறப்படுகிறது.