பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 மா தவம் புரிவாள் 1.9 நாகவல்லி நாகவல்லி என்பது திருமணம் சார்பான ஒரு சடங்கு வகை; நாகவல்லி முகூர்த்தம்' என்பர் சிலர். சில இனத்தவர், திருமண ஐந்தாம் நாளில் இந்தச் சடங்கைச் செய்வதுண்டு. இந்தச் சடங்கில் இன்றியமையா இடம் பெறுவதால், வெற்றிலைக்கு இப்பெயர் வந்தது எனலாம். இருப்பினும், இப்பெயர்க் காரணம் உள நிறைவு அளிக்கவில்லை. பச்சைக் கல்லுக்கு நாகப் பச்சை என்னும் ஒரு பெயர் சொல்லப்படுகிறது. நாகம் என்பதற்குப் பாம்பு என்னும் ஒரு பொருள் உண்டு. நாகப் பச்சை என்பதற்குப் பச்சைப் பாம்பின் நிறம் போன்ற பச்சை எனப் பொருள் கொள்ளலாம். இதே அடிப்படையில், பச்சைப் பாம்பு போல் தோற்றம் அளிக்கும் வெற்றிலைக் கொடிக்கு நாக வல்லி' என்னும் பெயர் நல்கப்பட்டிருக்கலாமோ-என்னவோ! நாகவல்லி என்னும் பெயர் சித்த வைத்திய அகராதியிலும் மூலிகை வைத்திய அகராதியிலும் உள்ளது. நாகவல்லி என்னும் பெயர், வெற்றிலை என்னும் பொருளில் வைத்திய மலையகராதியில் உள்ளது. வள்ளி என்பதும் கொடியைக் குறிக்கும். 1,10 மெல்லிலை மற்ற இலைகள்-கீரைகள் சமைத்து உண்ணப்படுவதால்வெந்து குழைந்து போவதால்-வாயிலிட்டு மெல்ல வேண்டிய முயற்சி மிகுதியாகத் தேவையில்லை. ஆனால், வெற்றிலை யைச் சமைக்காமலேயே பச்சையாக வாயிலிட்டு நன்கு மெல்ல வேண்டியிருப்பதால், இதற்கு மெல்லிலை (சி. வை அ.) என்னும் பெயர் தரப்பட்டுள்ளது. இதற்கு இலக்கிய ஆட்சி வருமாறு - சீவகசிந்தாமணி: