பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 மா தவம் புரிவாள் கொள்வது மற்றொரு முறை. சிலர் இரண்டு - மூன்று வெற்றிலைகளைத் தனித் தனியே சுருளாகச் சுருட்டி விரல் களுக்கு இடையில் இடுக்கி வைத்துக் கொண்டிருப்பதும், பிறகு ஒவ்வொரு சுருளாக எடுத்து வாயிலிட்டு மெல்லுவதும் பார்ப்பதற்கு அழகாயிருக்கும். இப்பெயர்கட்கு இலக்கியச் சான்றுகள் வருமாறு: சீவகசிந்தாமணி 'கப்புரப் பசுந்திரை கதிர்செய் மாமணிச் செப்பொடு சிலதியர் ஏந்த' (197.1,2) நச்சர் உரை: "கருப்பூர முதலியவற்றை யுடைய (வெற்றிலைச்) சுருளைச் சேடியர் செப்போடு ஏந்த' - திரைதலால்-சுருளுதலால் வெற்றிலைக்குத் திரை என்னும் பெயர் வந்தமை காண்க. 'இளிந்த காய்கமழ் திரை வாசம் ஈண்டி (1479-1) என்னும் சிந்தாமணிப் பாடல் பகுதியில் உள்ள திரை' என்பதற்கும் வெற்றிலை' என்றே நச்சினார்க்கினியர் பொருள் உரைத்துள்ளார். சிலப்பதிகாரம்: 'அம்மென் திரையலோடு அடைக்காய் ஈத்த மையி ரோதியை வருகெனப் பொருந்தி’ (16-55,56) கண்ணகி கோவலனுக்கு வெற்றிலைபாக்கு ஈந்தாளாம். ஈண்டு, திரையல் என்பது வெற்றிலையைக் குறிக்கும். 1.14 உதறி இப்பெயர் சா. சி. பி. அகர முதலியில் உள்ளது. வெற்றிலையை விற்பவர்களும், வெற்றிலையில் உள்ள நீர் சிந்துமாறு கையால் உதறி, வலக்கையால் இடக்கையில்