பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 மா தவம் புரிவாள் என்பது பாடல். கருத்து: மணம் பொருந்திய வெற்றிலைச் சாற்றால், வளிநோய், மாந்தம், மூக்கு நோய் மூச்சிரைக்கும் ஐய நோய் ஆகியவை போய் விடும்; உடலுக்குள் ஒளியும், அறிவுக்குத் தெளிவும், கண்ணுக்கு நற்பார்வையும் உண்டாகும் - என்பது, பாடலின் இறுதியிலுள்ள 'மணஞ் சார்ந்த நறுந் தம்பல ரசம்' என்னும் பகுதி கருதற் பாற்று. கருப்பூர மணம் வீசும் கருப்பூர வெற்றிலையைப் பற்றியதே இப்பாடல் என்று கூறலாம். (சி. வை. அகராதி இதனை வெள்ளை வெற்றிலை என்கிறது.) மற்ற வெற்றிலைகளினின்றும் வெள்ளிலை என்னும் வெள்ளை வெற்றிலையை வேறு பிரித்தறிய இவ்வளவு சொல்ல வேண்டியதாயிற்று. வெள்ளிலை, வெள்ளடை என்பன நிறத்தால் பெற்ற பெயர்களாம். 6. வேறு பெயர்கள் பொருட் பண்பு நூலில், வெற்றிலையின் செய்கை காரணமாக, வெப்பம் உண்டாக்கி, அகட்டு வாய்வு அகற்றி துவர்ப்பி, காமம் பெருக்கி, அழுகல் அகற்றி, பசித் தீத் தூண்டி, பால் பெருக்கி, உமிழ் நீர்ப் பெருக்கி என்னும் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவற்றுள் அழுகல் அகற்றி, பால் பெருக்கி என்பனவற்றிற்கு மட்டும் விளக்கம் தந்தால் போதும். புண் அழுகிப் புரை போடாமல் இருக்கச் செய்வது அழுகல் அகற்றி (Antiseptic). வெற்றிலை களை நெருப்பில் வாட்டி அடுக்கடுக்காக முலைகளின் மேல் வைத்துக் கட்டினால் பால் சுரக்குமாம்பால் பெருக்கி.