பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. உள் கண்ணாடி இந்தக் கட்டுரை, கண்ணுக்கு நன்மை புரியும் பொன்னாங் கண்ணியைப் பற்றிய தாகும். இதற்கு உரிய பெயர்களையும் பெயர்க் காரணங்களையும் விளக்கமாகக் காண்போம். காணு ம் மூளை இங்கே ஒரு செய்தியை நினைவு கூரவேண்டியுள்ளது. பொருள்களைக் கண் காண்பதில்லை, மனமே காண்கிறது. மனம் என்பது மூளையின் இயக்கமாகும். மனமாகிய மூளையே கண் என்னும் வாயிலின் - சாளரத்தின் வழியாகப் பொருள்களைப் பார்க்கிறது. நாம் தேடிச் செல்லும் ஒருவர் எதிரே வரினும், யாரோ வருகிறார் என அறியினும், மனம் வேறு எதையாவது எண்ணிக் கொண்டிருந்தால், நாம் அவரது உருவத்தைப் பார்த்தும், பார்க்காதவர் போல் சென்று விடுவோம். மனம் காணாததால், கண் அவரை இனம் கண்டு கொள்ள இயல வில்லை. கண் என்றென்ன ! மெய், வாய், கண், முக்கு, செவி என்னும் ஐம்பொறிகளை வாயில்களாகக் கொண்டு மூளையே ஐவகைச் செயல்களையும் புரிகிறது. அதனால் ஐம்பொறிகளை அறிவுக் கோட்டையின் ஐந்து வாயில்கள்' (Gates of knowledge) argårust 2-616%uavitri. 5Taio Lóð களாகிய (stimulus) வெளிப் பொருள்கள் பற்றிய செய்தி கள் ஐம்பொறிகளிலிருந்து செல்லும் உட் செல் நரம்பு