பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 மா தவம் புரிவாள் தால் ஒளவையார் நீண்ட நாள் உயிர் வாழ்ந்தார் என்பதே அச்செய்தி. எனவே, கருநெல்லி போலவே, பெளதிகம் ஆகிய உடம்பை நெடுநாள் வாழ்விக்கும் பொன்னாங் கண்ணிக்கு இப்பெயர் சாலத் தகும். முதல் 24. மச்சி மச்சி யாச்சி (மு.வை.அ.), மச்சிக் கண்ணி, மச்சியாங் கணி (சி.வை.அ.), மச்சியாங் கண்ணி, மச்சியாத்தி (சா.சி.பி.அ.), மச்சிப் பாசி (யா.அ.) ஆகிய பெயர்கள் பொன்னாங் கண்ணிக்கு அகர முதலிகளில் தரப்பட்டுள்ளன. மச்சியாச்சி என்பதில் உள்ள ஆச்சி' என்பது பெண்டிரைக் குறிப்பது. ஆத்தி என்பது பெண்பாற் பெயரீற்று உறுப்பு ஆகும் (எ. கா. வண்ணாத்தி). கணி, கண்ணி, காணி, என்பன, கண்ணை உடையவள் - காண் பவள் என்னும் பொருளன. ஆக, பொன்னாங்கண்ணிச் செடி பெண்பாலாக்கப்பட்டுள்ளது. பெளதிக மங்கை என்னும் பெயரிலும் இதைக் காணலாம். எனவே, மேலே - இங்கே தரப்பட்டுள்ள பெயர்களின் அடிப்படைப் பெயராக இருப்பது மச்சி என்பதே, இனி மச்சி என்பதற்குப் பெயர்க் காரணம் காணவேண்டும். நெடுநேரம் எண்ணிப் பார்த்ததில் மூன்று வகையான பெயர்க் காரணங்கள் முகிழ்த்தன. முறையே அவற்றைக் காண்பாம்: முதலாவது காரணம் மச்சி என்பதற்கு மைத்துணி என்னும் ப்ொருள் உண்டு. மைத்துணியை மச்சி என அழைக்கும் வழக்கம் நடைமுறை யில் உண்டு. வித்தை விச்சையானாற்போல, மைத்துணி என்பது மைச்சுனி என்றாகி, ஐ-அ போலி என்னும் கொள்கைப்படி மைச்சுணி மச்சுனி யாகி, இறுதியில் சுருக்க மாக மச்சி எனும் மரூஉப் பெயராயிற்று. எனவே, மச்சி