பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மாதவம் புரிவாள் 1.2.16 கோகனகம் - கோகனதம்: கோ = நீர் 'வரு கோவைச் சூடி" - (இலக்கண விளக்க உரை) கனகம் = பொன். பொன்னம்பலத்தைக் கனகசபை' என்று கூறுதல் ஒப்புநோக்கற் பாலது. செந்தாமரையைப் பொற்றாமரை என்று கூறும் செய்யுள் வழக்குக்குச் சில எடுத்துக்காட்டுகள்: திருவிளையாடற் புராணத்தில் உள்ள "பொற்பங்கயத் தடம்', 'ஆடகப் பங்கயப் பொய்கை' என்னும் ஆட்சிகளும் பாணர் சூடிய பசும்பொற் றாமரை' என்னும் புறநானூற்று (141) ஆட்சியும், பைம்பொற் றாமரை பாணர்ச் சூட்டி' என்னும் பதிற்றுப் பத்து (48) ஆட்சியும் தக்க எடுத்துக்காட்டுகளாம். எனவே, கோ கனகம்' என்பதற்கு, நீரில் உள்ள கனக (பொன்) நிறமான தாமரை எனப் பொருள் கொள்ளல் வேண்டும். இது கோகனதம் என்றும் கூறப்படும். இ.சா: திருவாய்மொழி 9.8.2 கொடியே ரிடைக் கோகனத் தவள் கேள்வன்' - (கோகனத்தவள் = கோகனத்தில் (தாமையில்) உள்ள திருமகள்) கோகனத முகங் காட்ட (தேவா - 575-3) . . ; (பழைய பதிப்பு) 1.2.17 கோகயம் (மலை.அ.) கோ = நீர், கயம் = நீர், நீர்நிலை. இ.சா, மணிமேகலை. - 'துணி கயந் துகள்படத் துளங்கிய வதுபோல்' (24-84) நீர் நிலையில் உள்ளது தாமரை. இஃதும் இடவாகு பெயராம். 1.2.18 நீரோருகம் (மலை.அ.) நீர் + உருகம் = நீரில் தோன்றுவது - தாமரை.