பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மர் தவம் புரிவாள் 1.4.2 சந்திகாம்புயம் (மலை.அ.) என்னும் பெயரும் உண்டு. சந்திரக + அம்புயம் = சந்திரகாம்புயம்; வண்டு தேன் உண்ணும் தாமரை என்று இதற்குப் பொருளாம். சந்திரகம் = வண்டு. 1.4.3 புண்டரிகம்: புண்டரீகம் - என்னும் பெயரும் உண்டு. புண்டரிகம் என்றால் வண்டு. இ.சா.:

பாடல் புண்டரிகத்த செம்பதுமம்'

(இரகுவம்சம் - குலமு. - 3) வண்டு தேன் உண்பதால் புண்டரிகம் - புண்டரீகம் எனப் பெயர் தரப்பட்டது தாமரை. இ.சா.: திவ்யப் பிரபந்தம்-இயற்பா-நான்முகன் திருவந்தாதி: 'புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம் பரிந்து படுகாடு நிற்ப. (45) தக்கயாகப் பரணி: - 'வெள்ளிதழால் ஒரு புண்டரீகமும்' (282) 1.5 திருமகளும் தாமரையும்: தாமரைக்குத் திருமலர் (நி.), திருமாதகம் (நி.), சீதளம் (நி.), பொன் மனை (பொ.ப.நூ), திருமால் கொம்பர் (ஜூ) என்னும் பெயர்கள், அதனிடம் திருமகள் தங்கி யிருப்பதால் இடப்பட்டுள்ளன. 1.5.1 திருமலர், திரு = இலக்குமி (திருமகள்). இ.சா. திவ்யப் பிரபந்தம் திருவாழ் மார்வன் தன்னை - (1604) திருவுக்கும் திருவாகிய செல்வா! தெய்வத்துக்கு அரசே! செய்ய கண்ணாய்|' திரு (இலக்குமி) தங்கியிருக்கும் மலர் திருமலர் ஆகும். இ.சா. கல்லாடம்