பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மா தவம் புரிவாள் இனிமை யுடையது என்ற பொருளிலும் இப் பெயரைக் கொள்ளலாம். பொருட் பண்பு நூலில், தாமரையின் சுவை இனிப்பு என்றும், இது இனிப்புப் பிரிவைச் சேர்ந்த கொடியினம் என்றும் கூறப்பட்டுள்ளது. தாமரைப் பூவின் நடுவில் உள்ள மணி போன்ற விதைகளைச் சிறார்கள் தின்னுவதுண்டு. (இது சொந்தப் பட்டறி வாகும்) அட்ட தளம் முதல் தென் புறம் வரையுள்ள பெயர்கள் தாமரைக்கு வடிவால் வந்தவை. 3. நிறத்தால் பெற்ற பெயர்கள் 3.1 தாமரை, பூவின் நிறத்தைக் கொண்டு, செம்மை, வெண்மை, மஞ்சள், நீலம் என நான்கு வகைப்படும் எனச் சொல்லப்படுகிறது. திருமகள் இருக்கும் செந்தாமரையும், கலைமகள் இருக்கும் வெண்டாமரையும் தமிழர் அறிந்தவை; மஞ்சள் தாமரை ஓரளவு அறியப்பட்டிருக்கலாம். நீலத் தாமரை சிறிது புதிதாகும். இந்த நால்வகை பொருட் பண்பு நூலில் கூறப்பட்டுள்ளமை காண்க. 3.2 கருந்தாமரை கருந் தாமரை, கருஞ் செந்தாமரை என்னும் இருவகை சா. சி. பி. அகர முதலியில் கூறப்பட்டுள்ளன. கருந் தாமரையை நீலத் தாமரை எனலாம். கருமையும் செம்மை யும் கலந்தது கருஞ் செந்தாமரை யாகும். கருந்தாமரை நீரில் மிதப்பதாம். 3.3 இரத்தக் குமுதம் இரத்தம் செந்நிற மல்லவா? மிகவும் சிவப்பாயுள்ள தாமரைக்கு 'இரத்தக் குமுதம்' என்னும் பெயர் சா.சி.பி. அகர முதலியில் தரப்பட்டுள்ளது.