பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 43 ஏழை பங்காளன், அர்த்தநாரீசுரன் முதலிய பெயர்களைச் சிவனுக்குச் சூட்டினர். தையல், நாரி, ஏழை = பெண். ஏழை பங்காளன் என்னும் பெயர், வறியவரின் பக்கம் இருந்து அருள்புரிபவன்; பெண்ணை ஒரு பங்கிலே உடையவன் என்னும் இருபொருள் நயம் உடையது. அர்த்தம் என்றால் பாதி, நாரி என்பது பெண்; பெண்ணை உடம்பின் ஒரு பாதியில் உடையவன் என்னும் பொருளில் அர்த்த நாரீசுரன் என்னும் வடமொழிப் பெயர் உள்ளது. மேற்கூறிய பெயர்களுள் சில வேறு நிகண்டுகளில் இருக்க, கயாதர நிகண்டில் பாதி உமாபதி என்னும் பெயர் கூறப்பட்டுள்ளது; அதாவது, பாதி பாகத்தில் உள்ள உமையின் கணவன் என்பது இதன் பொருள். இந்த அடிப்படையுடன், சிவசத்தி பகிர்ந்தான் என்னும் பெயருக்குச் செல்லலாம். 5.1.2 பகிர்தல் பகுத்தது பாகம். பகிர்தல் என்பதற்கும் இப்பொருள் கூறலாம். அதாவது, பகுத்தல், பகிர்தல் என்பனவற்றிற்குப் பாதியாகப் பிரித்தல் என்று பொருள் கூறலாம். இப் பொருளின்படிநோக்கின், சிவசத்தி பகிர்ந்தான் என்பதற்கு சிவனையும் சத்தியாகிய உமையையும் பாதியாகப் பிரித்தான் எள்று பொருள் செய்யலாம். சிவனது உடம்பு பகிர்க்கப் பட்டுள்ளது என்னும் ஆட்சி, அதாவது, பகிர்தல் என்பதன் இலக்கிய ஆட்சி நால்வர் நான்மணிமாலை என்னும் நூலில் உள்ளது. விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கண் காரணன் உரையெனும் ஆரண மொழியோ (4) என்பது பாடலின் முதல் இரண்டடி. விளங்கு இழை = விளங்கும் அணிகலம் உடைய சிவை. இது, வினைத்