பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மா தவம் புரிவாள் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. முக்கண் காரணன் = மூன்று கண்களையுடைய உலக முதல்வனாகிய சிவன். சிவன் எத்தகைய மெய்யை (உடம்பை) உடையவன்? உமைக்காகப் பாதி பகிர்ந்த மெய் உடையவன். இங்கே, பாதியாகப் பகிர்தல் என்னும் சொல்லாட்சி வந்துள்ளமை காண்க. பாதி யெனினும் அரை யெனினும் ஒன்றே. அரைப்பாகம் சிவனாகவும் அரைப்பாகம் சிவையாகவும் பகிர்ந்தவன் தாமரை என்பதில் உள்ள சொல் விளையாட் டாவது: தாமரை என்பதை, தாம்+அரை என்று பிரித்துக் காண வேண்டும்; சிவனும் சிவையும் தாம் அரை - அரைப் பாகமாகப் பகிர்க்கப்பட்டிருக்கின்றனர் என்று இதற்குப் பொருள் காண வேண்டும். தாம்--அரை-தாமரை என்ற சொல் விளையாட்டு நயம் ஒன்றையே ஈண்டு எடுத்துக் கொள்ள வேண்டும். 5.2 பழுதுடை நாயகம் இப்பெயர் சா.சி.பி. அகர முதலியில் உள்ளது. நாயகம் என்றால் தலைமை, மேன்மையாகும். தலைமையிடத்தில் பழுது (குறைபாடு) இருத்தலாகாது. பழுது உடையது தலைமைக்கு ஏற்றதன்று. ஆனால், தாமரை நாயகமாகவும் உள்ளது - பழுது உடையதாகவும் உள்ளது. இதனால் இதனை ஒரு சொல் விளையாட்டுப் பெயராகக் கொள்ள லாம். சொல் விளையாட்டு எனினும் இதற்குத் தீர்வு காண வேண்டுமன்றோ? 5.2.1 நாயகம் தாமரை, மலர்கட்குள் தலைமையானது என்பதற்கு, முன்பு காட்டியுள்ள 'பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை' (அப்பர் தேவாரம்)