பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 98 உயிரையே நெய்யாக உண்டு ஓங்கி வளரும் தேசபத்தி என்ற பெருந்தீயாக அது உருக்கொண்டது. இவ்வுண்மையை மருதிருவர் வரலாறு முழங்கும்; பாரத நாட்டின் சுதந்தர வரலாறு பறை சாற்றும். ஆர்க்காட்டு நவாபு பறங்கியரின் படைகொண்டு மறவர் சீமையின் மீது எந்த நேரத்திலும் படையெடுத்து சூழ்ச்சிகள் புரியக் கூடும் என்று எண்ணியபோதெல்லாம் மறவர் மக்களின் கண்கள் சிவந்தன. அவர்கள் செங்குருதி கொதித்தது. அதன் பயனாகக் காலவெளியிலே-வரலாற்று விண்ணிலே - கன்னித் தமிழகத்திலே - அடிவானம் சிவந்தது. காரிருளை சூழ்ந்துவரும் அடிமை வாழ்வை - வெட்டிச் சாய்க்கும் ஆதவன் உதயமானான். 1748ஆம் ஆண்டில்' தமிழகத்தின் தனிப்பெருந்தலைவன் - இந்திய விடுதலைப் போரின் இணையில்லா வீரன் - பெரிய மருது பாண்டியன் பிறந்தான். இராமநாதபுர மாவட்டத்திலுள்ள அறுப்புக் கோட்டையிலிருந்து கிழக்கே பதினெட்டு மைல் தொலைவில் முக்குளம் என்னும் அழகிய கிராமம் ஒன்று கிருதுமால் நதிக்கரையில் அமைந்துள்ளது. நீர்வளமும் நிலவளமும் நிறைந்து பச்சைப்பசேலென என்றும் குன்றாப் பசுமையுடன் விளங்கும் இக்கிராமத்தில், தொன்று தொட்டுப் புகழுடன் விளங்கிய சேர்வைக்காரர் குடும்பம் ஒன்று இருந்தது. அக்குடும்பத்தின் பெருமை துலங்க 1748ஆம் ஆண்டில்' பிறந்தவரே பெரிய மருதுபாண்டியர். இவரை ஈன்றெடுத்த அருமை அன்னை ஆனந்தாயி, என்னும் பொன்னாத்தாள். இவரைச் சான்றோராக்கிய தந்தையார் உடையார் சேர்வ்ை என்னும் மொக்க பழனியப்பன் சேர்வை. சிவகங்கையை அடுத்துள்ள புதுப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண்ணரசியாகிய பொன்னாத்தாளைத் திருமணம் புரிந்து கொண்ட உடையார் சேர்வை, தம் காதல் மனைவியுடன் இராமநாதபுரம் சேர்ந்து, கொங்காரு தெருவில் குடியேறினார்." அவர் காலத்தில் பெரியமறவர் நாட்டை ஆட்சி புரிந்து வந்த சேதுபதி, முத்து விஜய இரகுநாதர். உடையார் சேர்வை, சேதுபதியின் படையில் சிறப்பு வாய்ந்த படைத்தளபதியாய் விளங்கினார். ஆம். உடலுரத்திலும் நெஞ்சுரத்திலும் நிகரற்று விளங்கிய அவ்வீரருக்குத் துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்தது போலப் பிறந்த வீரரே நம் பெரிய மருது பாண்டியர். தவமிருந்து பெற்ற தம் அருமைக் குழந்தைக்கு உடையார் சேர்வையும் அவர் மனைவியாரும் தம் குல தெய்வமாகிய மருதப்பசுவாமியின் பெயரையே சூட்டினர்; அன்புடன் தழுவி அகமகிழ்ந்து உச்சிமோந்து உணர்வு மேலிட்டுச் சீராட்டிப் பாராட்டிச் சுதந்தர வீரரை வளர்த்தனர். அன்னை ஈந்த அமுதுடன் வீரப் பாலுண்டு வளர்ந்தது குழந்தை. ஆனந்தாயி ஆத்தாள் குழந்தையின் உடலைப் பாலூட்டி உணவளித்துப் போற்றியது போலவே, பாண்டிச் சீமையின் பழமை சான்ற வீரக்கதைகள் பலவற்றையும் கூறி மருதுவின்