பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 பேராசிரியர் ந.சஞ்சீவி உள்ளத்தையும் உரமுடையதாக்கி வந்தாள். அன்னை அளித்த உணவும், உணர்வும், அருமைத் தந்தையார் அளித்த கல்வியும், படைக்கலப் பயிற்சியும் சேர்ந்தே பின்னாளில் பெரிய மருதுவை உலகம் மதிக்கும் ஒப்பற்ற வீரராக்கின எனல் மிகையாகாது. 'விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, பிள்ளைப் பருவத்திலிருந்தே பெரிய மருதுவின் தோற்றப் பொலிவிலும் செயல் திறங்களிலும் அவர் மாவீரராய்ப் பின்னாளில் உருவாவதற்குரிய அறிகுறிகள் பல காணப்பட்டன. ஒடும் பாம்பையும் அஞ்சாது மிதிக்கும் இளமைப்பருவத்தை அடைந்தார் பெரிய மருது. அந்நாளில் அவருடைய ஒளி பொருந்திய விழிகளையும், நீண்ட கைகளையும், எடுப்பான பிடரியையும். நிமிர்ந்த பார்வையையும், செதுக்கிவிட்ட சிலை போன்ற உடல் அமைப்பையும், விரைந்த நடையையும், வெடுக்கெனப் பேசும் மொழிகளையும், துடுக்கான செயல்களையும் கண்ட முதியோர், உடையார் சேர்வையையும் அவர் வாழ்க்கைத் துணைவியையும் கண்ணாரக்கண்டு வாழ்த்தினர். காலக் கணிதரும் கைரேகை பார்ப்போரும் மருதுவின் சாதகக் குறிப்பையும் கைரேகைகளையும் முகச்சாடைகளையும் அங்க அடையாளங்களையும் கண்டு 'பாட்டனார் ஆண்ட பழுதில்லாப் பாண்டி ராஜ்யத்தை ஆள வந்தவன் ஐயா உம் பிள்ளை' என்று உடையார் சேர்வையை அணுகி வாய் குளிர மனங் குளிரக் கூறினார்; மருதுவின் பெற்றோர் கண்களில் இன்பக் கண்ணின் கரந்தது. எல்லாவற்றிற்கும் மேலாகச் சுதந்தர தேவதை மைந்தனே, மருதப்பா, வளரு விரைவாக வளரு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரு புல்லர்களைப் புழுதியாக்கக் காளையைப் போல - களிற்றினைப் போல - வளரு ஏகாதிபத்திய வெறியர்களின் எலும்பை நொறுக்க மின்னல் வேகத்தில் வளரு' என்று வாழ்த்திய வண்ணம் இருந்தாள். அவள் வாழ்த்தியது வாசியாவது திண்ணமன்றோ? மருதுவின் உடல் வளர்ந்தது; உள்ளம் விரிந்தது. வீரம் பெருகியது: தியாகம் ஓங்கியது. ராஜகளை மிகுந்தது; புகழ் பரவியது. இந்நிலையில் பெரிய மருதுவின் புகழுக்குப் போட்டியாக அவர் வீட்டிலேயே இன்னொருவர் தோன்றினார். ஆம். அவர்தாம் சின்ன மருது: பெரிய மருதுவின் அருமைத் தம்பியார். ஐந்து ஆண்டுகளில் அடுத்ததும் ஆனாய்ப் பிறந்தது கண்டு அளவிலா மகிழ்ச்சி கொண்டனர் பெற்றோர்; இரு பிள்ளைகளையும் தம் இரு கண்கள் போலப் போற்றி வளர்த்தனர். ஆனந்தாயிக்கு மட்டுமே அல்லாமல் தமிழ்த் தாய்க்கே இரு கண்கள் போன்ற அம்மைந்தர் இருவரும், பெற்றோர் அன்பையும் நல்லோர் ஆசியையும் இறைவன் திருவருளையும் துணையாகக் கொண்டு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வரலாயினர்.