பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்தி மருதுபாண்டியர் 104 பெரும்புயல்களைக் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளாகக் கண்டு கண்டு களைத்தும் கலங்கியும் போயிருந்த கன்னித் தமிழகத்தில், இன்னொரு பெரும் புயல்-கடும்புயல்-போர்ப் புயல்-அடித்தது. அப்புயலால் விளைந்த சேதம் அளவிற்கு எட்டாதது. கடலிலே பெரும்புயல் ஏற்படுவதற்கு எத்தனையோ விஞ்ஞான ரீதியான காரணங்கள் உண்டு என்பதை நாம் அறிவோம். அவ்வாறே சிவகங்கையைச் சுற்றிச் சூழ்ந்திருந்த தமிழகமும் கடும்புயல் ஒன்றுக்கு இரையாவதற்கு எத்தனையோ அரசியல் காரணங்கள் இருக்கத்தான் செய்தன. அக்காரணங்களுள் எல்லாம் தலையாய காரணங்கள் இரண்டு. ஒன்று, ஆர்க்காட்டு நவாபுவின் அடிமைப்புத்தி; மற்றொன்று, ஆங்கிலக் கொள்ளைக் கூட்டத்தின் ஏகாதிபத்திய வெறி. இவ்விரு காரணங்களும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாமல் பிணைந்திருந்த பான்மையை என்னென்று சொல்வது! 1770ல் தஞ்சை வேந்தன் மறவர் சீமையைத் தாக்கினான் என்று சற்று முன்பார்த்தோமல்லவா? தஞ்சை வேந்தனை எப்படிய்ாவது ஆண்டியாக்கித் தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் கொள்ளையிட வேண்டும் என்று பேராசை கொண்டிருந்த நவாபு, தஞ்சை வேந்தனின் போக்குச்சட்டத்திற்கும் சமாதானத்திற்கும் நீதிக்கும் நேர்மைக்கும் தீங்கிழைக்கும் என்று வெள்ளைக் கம்பெனியிடம் புகார் செய்தான். இஃது எவ்வளவு நல்லெண்ணம்! வெள்ளைக் கம்பெனிக்கு ஆர்க்காட்டு நவாபுவின் குரலுக்குச் செவி சாய்க்காமல் இருக்க முடியவில்லை. காரணம், அந்நாளில் இங்கிலாந்தை ஆண்ட ஜார்ஜ் மன்னன் எக்காரணத்தாலோ ஆர்க்காட்டு நவாபுவின் மேல் ஒரு வகையான இரக்கம் கொண்டு, அவனுடைய கவுரவம்' கம்பெனியாரால் களங்கப்பட்டு விடாமல் காப்பாற்றத் தேவையற்ற செயல்களைச் செய்து கொண்டிருந்தான். எத்தனையோ இடர்ப்பாடுகள் இதனால் பின் நாளில் கம்பெனிக்கே நேர்ந்தன என்பதை வரலாற்று ஆசிரியர்கள் வாய்விட்டுக் கூறிப் புலம்புகிறார்கள். எதிர்பாராமல் தனக்கு வந்த வாழ்வினால் மமதை கொண்ட நவாபு, மேலும் ஒரு படி துள்ளிக் குதிக்கலானான், தஞ்சை வேந்தனைக் கண்டித்தல் மட்டும் போதாது; தண்டிக்கவும் வேண்டும், என்று தலைகீழாய் நின்றான், இராமநாதபுரச்சீமை தன் ஆட்சிக்குட்பட்டு ஆளும் குறுநில மன்னனின் பூமி என்றும், அம்மன்னைப் போலவே தனக்குத் தலை வணங்கி வாழவேண்டிய தஞ்சை மன்னன் தன்னைக் கேளாமல் சேதுபதிமேல் படையெடுத்தது அநியாயமென்றும் அலறினான். ஆமாம்! இதைவிட அநியாயம் வேறு இல்லை. இராமநாதபுரச் சேதுபதியை நாமே காப்பாற்ற வேண்டும். இந்த வினாடியே வெள்ளைக் கம்பெனி அதற்காக வரிந்து கட்டிக் கொண்டு புறப்பட வேண்டும், என்று முதலைக் கண்ணிர் வடித்தான். புதுக்கோட்டை