பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 106 அநீதிகள் புரிகிறார்கள் என்றும், இல்லாததும் பொல்லாததுமான குற்றச்சாட்டுக்களை எல்லாம் எழுதினான் இராமநாதபுரம் சிவகங்கைச் சீமையை அடிமைப்படுத்தக் கும்பினிப் பட்டாளத்தை உடனே அனுப்ப வேண்டும் என்றும் குமுறினான். ஆனால், கும்பினி அரசாங்கத்திற்கே நவாபுவின்போக்கு வியப்பை அளித்தது. நேற்று வரை மறவர் சீமைக்காகப் பரிந்து பேசிய நவாபு திடீரென்று அவர்கள் மீது பாய்வது கண்டு, ஏகாதிபத்திய வெறியர்களே திடுக்கிட்டுப் போனார்கள். ஆனால், அதைப்பற்றி அவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? நவாபுவின் பெயரையும் தர்பாரையும் பயன்படுத்திக் கொண்டு நாட்டு வேந்தர்களை அழிப்பதில் அல்லவா அவர்கள் எதிர்காலம் அடங்கியிருந்தது 1772, மே மாதம், நவாபுவின் நச்சு எண்ணங்களை நிறைவேற்ற ஜோசப்பு ஸ்மித்தின் தலைமையில் கும்பினிப் பட்டாளம் புறப்பட்டது. பழைய படியே நவாபுவின் திருக்குமாரன் கும்பினிப் படையோடு சென்றான்; போர் வீரர்கட்குப் பணம் கொடுப்பதாக முன்னதாகவே பசப்பு மொழிகள் கூறி இராமநாதபுரத்தைக் கொள்ளையடித்தான். இப்படையெடுப்புக்குப் பேருதவி புரிந்தான் புதுக்கோட்டைத் தொண்டைமான். சர்தார் சதாசிவ ஐயர், ஆதிநாராயணன் முதலியவர்கள் தலைமையில் இருநூறு பேரடங்கிய குதிரைப்படையையும் ஐயாயிரம் பேரடங்கிய காலாட்படையையும் அவன் அனுப்பி வைத்தான். இராமநாதபுரத்தார் தாம் செய்த குற்றம் என்ன என்பதை அறியுமுன்னே கும்பினிப் படை இராமநாதபுரத்தைத் தாக்கியது; கைப்பற்றியது". இந்தச் சமயத்தில் இராமநாதபுரச் சீமையை ஆண்ட சேதுபதி ஒன்பது வயதுச் சிறுவன் குழந்தைச் சேதுபதியையும் அவன் தாயையும் சகோதரியையும் கும்பினிக் கூட்டமும் நவாபு சேனையும் சேர்ந்து கைது செய்தன; திருச்சியில் சிறை வைத்தன. இதன் பின் எட்டு ஆண்டுகள் என்றும் காணாத காரிருள் கவ்விக் கொண்டது. இராமநாதபுரம் பிடிபட்டதும் வெள்ளைப்படையும் நவாபுவின் சேனையும் சிவகங்கைச் சீமையை நோக்கிப் புறப்பட்டன; காளையார் கோவில் கோட்டைக்கு எதிரில் அணி வகுத்து நின்றன. அங்குத்தான் சிவகங்கைச் சீமையின் அரசராகிய வீரர் முத்து வடுகநாதரும்,' அவர் பத்தினியும், அமைச்சர்களான மருதிருவரும் இருந்தனர். காளையார் கோவிலைக் கைப்பற்றுவது ஏகாதிபத்திய வெறியர்கட்கு எளிதாய் இல்லை. இந்நிலையில் நவாபு தொண்டைமானுக்கு ஓலமிட்டு ஒலை அனுப்பினான். அதில் தொண்டைமான் சிவகங்கைச் சீமையை அடக்கப் படை ஏதும் அனுப்பாதது வியப்பை அளிக்கிறது என்றும், தொண்டைமானின் தந்தையார் சிவகங்கைச் சீமையைக் கைப்பற்றுவதில் கொண்டிருந்த ஆவல் பெரிது’ என்றும், தந்தையாரின் ஆவலை நிறைவேற்றப் பிள்ளைகட்குக்