பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 154 'கடிதப் போக்குவரவு முற்றிலும் அற்றுப் போய் விட்டது. எனவே, ஜூலை முடிவிலிருந்து செப்டம்பர் 6 ஆம் தேதி வரை மூன்று கடிதங்களே கர்னல் அக்கினியூவிடமிருந்து கிடைத்துள்ளன. இம்மூன்றில் இரு கடிதங்கள் மூன்று அங்குல நீளமும் ஓர் அங்குல அகலமும் உள்ள துண்டுச்சீட்டுகளாய் உள்ளன. இக்கடிதங்கள் வாயிலாகக் காளையார் கோவிலைக் காடு வழியாக அடையும் முயற்சி படுதோல்வி அடைந்தது என்பதைத் தவிர வேறொன்றையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. சிறு வயலிலிருந்து ஆகஸ்டு மாதம், 21 ஆம் தேதி கர்னல் அக்கினியூ எழுதிய ஒரு கடிதத்திலிருந்து எடுத்துக் கீழே தரப்பட்டுள்ள பகுதிகளால் அப்போது வெள்ளை இராணுவம் இருந்த நிலைமை விளங்கும். "பகைவனது இடத்தை அடைய நாளும் காட்டை அழித்துப் பாதை இடப்படுகிறது. ஆனால் ஒரு சிறிதும் வெற்றி ஏற்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அகழிகளையும் அரண்களையும் அடர்ந்த காடுகளையும் கடந்து நம் படைகளால் முன்னேற முடியவில்லை. மேலும் மேலும் காட்டை ஊடுருவிச் செல்ல நாங்கள் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியையும் எங்கள் எதிரிகள் முறியடித்துவிட்டார்கள். தக்க பாதுகாப்பான இடங்களில் தங்களை மறைத்துக் கொண்டு புரட்சிக்காரர்கள் எங்கள் முன்னோடிகள் மீது பிரயோகித்த குண்டுகளினின்றும் தப்பி முன்னேற நம் படை வீரர்களால் இயலவில்லை. திரும்பத் திரும்ப ஏற்பட்ட தோல்விகள் நம் படை வீரர்களை மிகவும் சோர்வடையச் செய்து விட்டன. 'நமக்குப் பெருத்த நஷ்டம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்றாலும், இந்த வழியில் நமக்கு வெற்றி கிட்டும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்க முடியவில்லை." 'இடையறாது வெயிலில் கிடந்தமையாலும், ஒய்வின்றிப் போரிட்டமையாலும் நம்படையில் நோய்கள் மலிந்து விட்டன. மிகப் பெரும்பாலான தளபதிகள் ஏதும் செய்ய இயலாத நிலையில் இருக்கின்றனர்.' மேற்கண்ட அக்கினியூவின் கடிதமே உரிமை வீரர்களின் கையில் அயலார் பட்டாளம் பட்ட அவதியை விளக்கப் போதுமானது. செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி புறப்பட்ட இடமாகிய ஒக்கூருக்கே திரும்ப ஓடிவந்தது ஆங்கிலப் படை, ஒக்கூரிலிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள சோழபுரத்தில் கர்னல் இன்ஸ் தலைமையில் ஒரு படை நிறுத்தப்பட்டது. செப்டம்பர் 3 ஆம் தேதி இன்னொரு படைகர்னல் அக்கினியூவோடு சோழபுரத்திற்குச் சென்றது. சோழபுரத்தில் கோட்டைபோல உயர்ந்த மதில்களை உடைய பெருங்கோயில் ஒன்று உண்டு. அவ்வூரை அடுத்தே