பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 156 கம்பளம் ஒன்றின் மேல் கர்னல் அக்கினியூவும், கர்னல் இன்ஸும் கொலுவிருக்க, அவர்கட்கு இரு புறமும் அமர்ந்தனர் உடையத் தேவரும் அவர் தமையனாரும். அவர்கட்கு எதிரே நாற்காலிகளில் அரை வட்டமாய் அமர்ந்திருந்தார்கள் வெள்ளைத் தளபதிகள். சற்று நேரத்தில் அமைதி நிலவியது. ஒருவன் எழுந்து உடையத் தேவரைச் சிவகங்கை அரசராக வெள்ளை அரசாங்கம் நியமித்திருக்கும் பிரகடனத்தைப் படித்தான் பின்பு அப்பத்திரத்தைக் கர்னல் அக்கினியூவின் கையில் கொடுத்தான். அந்தச் சீமைத்துரை அதை உடையத்தேவர் கையில் கொடுத்துவிட்டு, ஒரு 'பாராட்டுரையும் நிகழ்த்தினான். இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த சகோதரர்களின் இதயம் என்ன கல்லா, களிமண்ணா? அப்படி இருந்திருந்தாற் கூட நன்றாய் இருந்திருக்கும். புதிய ராஜா உடையத் தேவர் எழுந்து ஆவேசமாகத் தம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். பதினொரு பீரங்கிகள் முழங்கின. பட்டத்து யானைமேல் பொம்மை ராஜாவின் பவனி நடந்தது; சோழபுரக் கோவிலைச் சுற்றி ஊர்வலம் வந்தது. ஊர்வலம் கடைசியாகப் பந்தலுக்கு வந்து சேர்ந்ததும் உடையத் தேவரால் தமது உணர்ச்சியை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை. அவர் கண்களில் நீர் வழிந்தது. இனிச்சமாளிக்க முடியாது நம் உணர்ச்சியை' என்று தெரிந்ததும் க்ர்னல் அக்கினியூவின் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்தார் உடையத் தேவர். அவர் சகோதரரும் அக்கணமே கர்னல் அக்கினியூவின் அருகிலிருந்த கர்னல் இன்லின் காலில் விழுந்தார். இருவரும் கர்னல் அக்கினியூவின் கால்களையும் கர்னல் இன்ஸின் கால்களையும் கட்டிப் பிடித்துத் தழுவிக் கொண்டனர். இதை நேரில் பார்த்த வெல்ஷ் தன்நூலில் வருணிக்கும்போது நம் அங்கமெல்லாம் அவமானத்தால் ஆயிரம் ஊசிகள் கொண்டு குத்தியது போல வேதனைக்கு உள்ளாகிறது ஐயோ! அடிமை வாழ்வே ஏகாதிபத்தியச் சூழ்ச்சியே! என்னே உன் அலங்காரம் இக்காட்சியையெல்லாம் பார்த்துக் கொண்டு அந்தச் சோழபுரத்துக் கோவில் தெய்வமும் இருந்ததோ! முடிசூட்டு விழா என்ற பெயரால் இந்த அவமானக் காட்சி முடிந்ததும், புதிய 'ராஜா உடையத் தேவருக்கு அவரை ஒத்த மனம் படைத்த பல விசுவாசிகள் காணிக்கை கொண்டு வந்தார்கள். மானத்தினும் பொன்னையும் மண்ணையுமே பெரியனவாக மதித்தார் உடையத்தேவர். ஆனால், மருது பாண்டியரோ.... சிவகங்கைச் சீமையில் அரிமாவுக்கு அல்லல்; நரிமாவுக்குக் கொண்டாட்டம் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி லெப்டினன்ட் கர்னல் ஸ்பிரே மதுரையிலிருந்து ஏராளமான பொருள்களை வெள்ளையர் முகாமுக்குக் கொண்டுவந்தான். வெளத்தூரில் ஒரு குதிரைப்படையும் எட்டயபுரச் சிப்பாய்களுள் சிலரும் தபால்களைக் கொண்டு வருவதற்காக நிறுத்தி