பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 பேராசிரியர் ந.சஞ்சீவி மன்னன் குடியில் பிறந்தும், தேரா மன்னன் ஆராயாது செய்த அநீதி ஒன்றே ஆயினும், பட்டாங்கில் யானுமோர் பத்தினியாகில், அல்வழிப்பட்ட ஆட்சியை அழித்தே தீருவேன்' என்று அமைதியே வடிவமாயிருந்த கற்பின் செல்வி, வீரக் கண்ணகியாய் வீறு கொண்டு, சிந்திய கண்ணிரோடும், விரித்த கூந்தலோடும், ஏந்திய சிலம்போடும் மன்னவன் நகரில், மாட மாளிகைகளில், புரட்சித் தீப்பற்றி எரியப் புறப்பட்டது மதுரை வீதிகளிலே அன்றி வேறு எந்நாட்டு எந்நகர வீதிகளில் நிகழ்ந்தது? அல்லற்பட்ட மக்களுக்காக அழுது இரங்கி, ஆருயிர் மருந்து அளித்து அன்பு செய்த குற்றத்திற்காகத் தன் நாட்டு அரசனாலேயே கொடுஞ்சிறையில் தள்ளப்பட்ட உலக வரலாற்றிலேயே முதற்பெண்ணரசி - சிறைக் கோட்டத்தையே சிதைத்து அறக்கோட்டமாக்கிய புரட்சி அன்னை - அறச்செல்வி - பிறந்தது தமிழ் மண்ணிலேயன்றி வேறு எங்கே? பிறந்த பொன்னாட்டில் வாழ இடமிருந்தும், வகையற்றுக் கண்ணற்ற குருடர் போலக் கடல் கடந்து சென்று, கூலிகளாய் ஆப்பிரிக்கக் காடுகளில் அடைக்கலம் புகுந்த நேரத்திலும் தன் இனத்தின் மானங்காக்கப் புரட்சித் தீப்பொங்கி எழுந்த நேரத்தில் அக்கொடுந்தீக்குத் தன் ஆருயிரையே காணிக்கை ஆக்கிய வீர வள்ளியைப் போன்ற மங்கையரைப் பெற்றெடுத்த இனம் தமிழ் இனமன்றி வேறு எந்த இனம்? அது மட்டுமோ சிப்பாய் கலகம் என்ற சிந்தனையே எழாத நாளில், அறப்போர் என்ற சொல்லே பிறவாத காலத்தில், பாரத நாட்டின் சொத்தையன்றிச் சுதந்தரத்தை, சுயமரியாதையையே சூறையாடச் சூழ்ச்சி வலை விரித்த வெள்ளை வஞ்சகரை எதிர்த்துத் தென்பாண்டித் திருநாட்டில் விடுதலை முரசொலி இடியென முழங்கியது. அப்போர் முரசின் இந்திய சுதந்தரப் போரின் முதல் முழக்கம் தமிழ் நாட்டுக் கோட்டைகளிலும், கொத்தளங்களிலும், மலைகளிலும், காடுகளிலும் அல்லவோ எதிரொலித்தது! இருநூறு ஆண்டுகளுக்கு முன் வீரத் தமிழகத்தில் தொடங்கிய விடுதலைப் போர், மன்னர் பலியான பின்னும் மானம் படைத்த அவர் மரபினர் நடத்திய போர், தளபதிகள் கொல்லப்பட்ட பின்னும் தளராமல் மக்கள் நடத்திய போர், அவர் வழிவழி வந்த வீரத் தமிழ் மக்களால் கடந்த இரு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டது. அப்போரில் அல்லலுற்று அயர்வுற்ற நேரத்திலெல்லாம் அடிமைப்பட்ட மக்களுக்கு ஆத்திரம் ஊட்ட ஆண்மை மிக்க அரசியல் தளபதிகள் எத்தனையோ பேர் ஒருவர் பின் ஒருவராகத் தமிழகத்தில் தோன்றிய வண்ணம் இருந்தனர். வில்லும் வாளும் ஏந்தும் உரிமையிழந்த தமிழ் மக்களை, ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, இடியென முழங்கிப் போர் புரியத் தம் சொல்லாற் கவி புனைந்து ஆவேச வெறியூட்டினார் அமரகவி பாரதியார். தித்திக்கும் தமிழால் தேசபத்தி என்னும் தீயை நாட்டு மக்கள்