பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 பேராசிரியர் ந.சஞ்சீவி படையின் ஒரு பகுதியை அணை போடும் மக்கட்குத்துணை புரிய விரைந்து வருமாறு ஆணை எழுதி ஏவலாள் வாயிலாகக் கொடுத்தனுப்பினார். சிறிது நேரத்தில் போர்க்களத்தில் அழிவு வேலையில் - தற்காப்புப் பணியில் - ஈடுபட்டிருந்த மருதுவின் படை ஆக்க வேலை புரிய விரைந்து வந்துவிட்டது. அப்படை வருவதற்குள் இருந்த சிறு இடைவேளையிலும் மருதரசரால் வாளாவிருக்க முடியவில்லை. அவ்வூர் மக்களுள் தலைசிறந்த வீரனைக் கண்டு பிடிக்க விழைந்தார். யார் இந்த வெள்ளத்தில் குதித்துக் கரையேறுகிறார்களோ அவருக்குச் சீமையின் படையில் சிறப்பிடம் தரப்படும்; பார் புகழப் பரிசுகள் வழங்கப்படும், என்று ஒளி நிறைந்த கண்களோடு மக்களைப் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டே கூறினார். மக்களுள் பலரும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருக்கும் வேளையில் திடீரென ஒருவன் வெள்ளத்தில் பாய்ந்தான். திடும்' என்ற ஒலி கிளம்பிய இடத்தை அனைவரும் உற்றுப் பார்த்தவண்ணம் இருந்தனர். சிறிது நேரம் வரையிலும் ஆள் யார் என்பது விளங்கவில்லை. மீன் போல நீந்திச் சென்ற அம்மனிதன், சிறிது நேரத்திற்குள் அக்கரையேறிக் கை கூப்பி நின்றான். அவனைக் கூர்ந்து கவனித்த மக்கள், அரசே, அதோ: அவன்தான் உதயபெருமாள் கவுண்டன்! உதயபெருமாள் கவுண்டன்' என்றனர். மருதுவுக்கு ஒரே வியப்பு உதட்டில் புன்முறுவலோடு கூப்பிடு அவனை' என்றார். வந்தான் திருப்பாச்சேத்தி உதயபெருமாள் கவுண்டன், வீழ்ந்தான் அரசர் தாளில், எழுந்திரப்பா என்றார் மருதரசர். எழுந்து கைகட்டி நின்றான் பக்காத்திருடன், அவன் விழிகளை ஊடுருவிப் பார்த்தார் வேந்தர். ‘அரசே...' என்று இழுத்தான் உதயபெருமாள் கவுண்டன். சரி, என்ன சொல்லுகிறாய்?' என்றார் வெள்ளை மருது. அரசே, அடியேன் இன்றிலிருந்து புது மனிதன் பக்காத் திருடன் உதயபெருமாள் கவுண்டன் ஒழிந்து விட்டான். இனி நான் உங்கள் அடிமை. இந்த வெள்ளைத் துரைகளின் தலைகளைப் பனங்காய்களைச் சீவுவது போலச் சீவுவதே இனி என் தொழில். அடியேனைக் காப்பாற்ற வேண்டும்' என்றான். மக்களும் மருதரசரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. திருடன்திருந்தினான்: தேசபத்தனுமானான் உதயபெருமாள் கவுண்டன் சீமையின் சுதந்தரப் போரில் அக்கணமே குதித்தான். அவன் வாளுக்கும்வளரிக்கும் விருந்தான வெள்ளைத் துரைமார்களுக்கும் கூலிப்படை வீரர்களுக்கும் வரையறை இல்லை! திருட்டுத் தொழிலை விட்டுத் தேசபத்தனான அவனுக்குத் திருப்பாச்சேத்திக் கோவிலில் மருதரசர் சிலை அடித்து வைத்துச் சிறப்புச் செய்துள்ளார் என்றால், அப்பெருமகனாரது பரந்த உள்ளத்தை என்னென்று போற்றுவது அவரல்லரோ அரசர் அவர் ஆட்சி அன்றோ ஆட்சி 2. வெள்ளோலை வாசித்த வித்தகர்: