பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 20 விட்டு எரிந்தன. தூத்துக்குடி நகரம் புரட்சிப் படையின் கையில் சிக்கியது. அங்கிருந்த கம்பெனிச் சிப்பாய்கள் அனைவரும் கைதாயினர்; ஆயுதங்களும் பறிமுதலாயின. சுருங்கச் சொன்னால், திருவை குண்டம் கோவில் தவிர, தென்பாண்டி நாட்டில் எல்லா இடங்களும் விடுதலை வீரர்கள் வயமாயின எனலாம். ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளும் அளவு கடந்த வெடி மருந்தும் மறவர் படையின் உடைமைகள் ஆயின. இந்நிலையில் புதிதாக எழுப்பப்பட்ட பாஞ்சைக் கோட்டையைத் தாக்குவதற்கான ஏற்பாடுகளைக் கம்பெனிப் படைகள் செய்தன. பாளையங்கோட்டைக்குப் புறங்காட்டி ஒடிய கம்பெனிப் பட்டாளம், மீண்டும் விடுதலை வீரர்களது கோட்டையை அணுகும் வழியில் பட்ட துன்பம் சொல்லி முடியாது. அங்குலம் அங்குலமாக அவர்கள் மறவர் சேனையை எதிர்த்து முன்னேறிக் கொண்டிருந்தார்கள். பாய்ந்து வரும் கம்பெனிப் பட்டாளத்தின் குதிரைகளை வீர மறவர்கள் தங்கள் ஈட்டிகளாலேயே குத்திக் கொன்றார்கள்; இரவில் காடுகளின் இரு புறங்களிலும் உள்ள புதர்களில் பதுங்கியிருந்து கம்பெனிச் சிப்பாய்களை வெட்டிக் குவித்தார்கள். தமிழ் மறவரது வீர வாளுக்கு அந்நாளில் கிடைத்த இரை ஏராளம் ஆறே நாள்களில் புதிதாகக் கட்டப்பட்ட பாஞ்சைக் கோட்டை, முன் நிலையினும் உறுதி மிக்கதாய் விளங்கிற்று. பல்லாயிர வீரர்கள், கிழவர்கள், குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் சேர்ந்து செந்தமிழ் நாட்டின் உரிமையையே காக்கக் கட்டிய கோட்டையல்லவா அது? இரு பக்கங்கள் 500 அடி நீளமும் மற்ற இரு பக்கங்கள் 300 அடி நீளமும் கொண்டதாய்ப் பாஞ்சைக் கோட்டை ஓர் ஒழுங்கற்ற இணைக்கரம் போன்றிருந்தது. பனஞ்சாற்றில் மண்ணைப் பிசைந்து கட்டப்பட்ட வன்மை வாய்ந்த இக்கோட்டையின் சுவர்கள் 12 அடி உயரமுடையனவாய் இருந்தன. முள் வேலிகளால் சூழப்பட்டிருந்த இக்கோட்டையின் கொத்தளங்கள் சதுர வடிவினவாய் விளங்கின. ஏராளமான பீரங்கிகள் வைக்க ஏற்ற வசதிகளும் இருந்தன. வலிமை சான்ற இக்கோட்டையைப் பிடிப்பதற்கான இறுதிப் போரைக் கம்பெனிப்படையினர் 1801 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் நாள் தொடங்கினர்.கோட்டைக்கு மேற்கே 600 கெசத் தொலைவில் பெரியதொரு மேட்டை எழுப்பினர். அதன் நீளம் 40 அடி அகலம் 15 அடி உயரம் 16 அடி அதன்மேல் பீரங்கிகளை நிறுத்திக் கோட்டைச்சுவர் மீது குண்டுகளைப் பொழிந்தனர். ஒரிடத்தில் சிறிது கீறல் தென்பட்டதும் பறங்கியர் படை அதை நோக்கிப் பாய்ந்தது. கோட்டை மீதேறிக் குதிக்கலாம் என வெறி கொண்டு தாவியது. ஆனால், அந்தோ அவ்வீரர்களுள் ஒவ்வொருவரும் வீர மறவர் வேல்களால் குத்தப்பட்டும், வாள்களால் வெட்டப்பட்டும், இருபது அடி நீளமுள்ள ஈட்டிகளால் எறியப்பட்டும் இறந்தொழிந்தனர். இம்முயற்சியில்